நடிகர் அல்லு அர்ஜூனின் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமான ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது!
நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனைப் படைத்து வருகிறது. எல்லைத் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம் தற்போது ரஷ்ய சினிமா சந்தையில் வருகிற டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாக இருக்கிறது.
‘புஷ்பா- தி ரைஸ்’ திரைப்படம் ரஷ்யாவில் தற்போது பிரம்மாண்டமான வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. பல மொழிகளில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரைய்லர் தற்போது ரஷ்ய மொழியிலும் வெளியாகி உள்ளது.
https://www.instagram.com/reel/CliJGAyj8aS/?igshid=YmMyMTA2M2Y=
ரஷ்யாவின் மாஸ்கோவில் டிசம்பர் 1ம் தேதி மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் டிசம்பர் 3ம் தேதியும் நடிகர்கள் மற்றும் படக்குழு முன்னிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும், ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் ’புஷ்பா’ திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.
ரஷ்யாவில் ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்புக் காரணமாகவே தேசம் தாண்டியும் தற்போது சென்றடைந்துள்ளது. ‘புஷ்பா’ படம் தொடர்பாக படக்குழு வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியிடுமா என ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.