விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் கட்டா குஸ்தி
வெட்டி நியாயம் பேசிக்கொண்டு தண்ணி அடித்துக் கொண்டு ஊர் சுத்தும் விஷ்ணு விஷாலுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது
விசுவின் மணல் கயிறு படத்தில் எஸ்வி சேகர் எட்டு கண்டிஷன் போடுவது போல்
விஷ்ணு விஷாலும் சில கண்டிஷன் போடுகிறார் பெண் தன்னைவிட படிப்பில் குறைந்தவராகவும்
அதாவது ஏழாம் கிளாஸ்
முடி நீளமானவராகவும்
தனக்கு அடங்கி இருப்பவராகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க
அதற்கு நேர் மாறாக கட்டாகுஸ்தி போடும் வீராங்கனை “”கிராப் தலை” ஐஸ்வர்யாலட்சுமியை
ஏமாற்றி மணமுடித்து வைக்கிறார் நாயகியின் சித்தப்பா முனிஷ்காந்த்
உண்மை தெரிந்தவுடன் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகவும் குடும்பப் பாங்காகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்ல அய்யாவு
விஷ்ணு விஷாலை பாராட்டியே ஆக வேண்டும் கதையின் போக்கு கதாநாயகியின் மேல் சென்றாலும் ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக இருந்து கொண்டு இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும் அதற்கு விஷ்ணு விஷாலுக்கு ஒரு சபாஷ் போடலாம்
தாய் மாமன் கருணாஸ் உடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டி எதார்த்தமான கிராமத்து வாசனை
கணவன்மார்கள் மனைவிமார்கள் பற்றி குறை சொல்லி கூறுவதும் மனைவிகள் கணவன்மார்களை பற்றி குறை கூறும் காட்சி ஒவ்வொரு வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வு அதை அருமையாக தந்திருக்கிறார் இயக்குனர்
நாயகி ஐஸ்வர்யா லட்சுமி ‘கட்டா குஸ்தி” வீராங்கனைக்கு ஏற்ற உடல்வாகு அதுவும் கட்டாகுஸ்தி விளையாடும் அவரின் அழகு பார்ப்பவரை கைதட்ட வைக்கும்
‘கிராப் “தலையுடன் இருக்கும் அவர் சவுரி முடி வைத்து கணவரை ஏமாற்றும் காட்சியில் அதுவும் குளியலறையில் “சவுரி முடியை “கலைத்து துணி துவைப்பது போல் துவைத்து காயப்போடும் காட்சி பார்ப்பவரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
கோயிலில் கணவனை அடிக்கும் வில்லனை “நைய புடைக்கும்” காட்சியில் ஐஸ்வர்யா லட்சுமி இன்னொரு ”விஜயசாந்தி”
கணவனுக்கு அடங்கி தான் மனைவி இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் மத்தியில்
மனைவியும் தனக்கு நிகரானவர் தான்
ஆணுக்கு நிகர் பெண் என்பதை
நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் குடும்பத்துடன் பார்க்கும்படி இயக்கி இருக்கும் இயக்குனருக்கு
” focusone cinema “சார்பாக வாழ்த்துக்கள்
கட்டா குஸ்தி
காமெடி குஸ்தி