spot_img
HomeCinema Reviewநேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

இந்தியில் வெளிவந்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக்  நேர்கொண்ட பார்வை மீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா)ஆகிய மூவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் நண்பர்களுடனான பார்ட்டியின்போது, புதிதாக அறிமுகமான இளைஞன் ஒருவன் மீராவை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, அவனை பாட்டிலால் அடித்துவிட்டு மூவரும் வெளியேறுகிறார்கள்.அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள். கொலை முயற்சி புகாரில் மீராவைக் கைதுசெய்கிறது காவல்துறை.  அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார். அவர்களுக்காக வாதாட முன்வருகிறார் வக்கீல் அஜித்
வழக்கின் முடிவில் யார் தண்டிக்கப்படுகிறார்கள்   அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே மீதிக்கதை.
அஜித்  அவருடைய பிம்பத்தை விட்டு முழுக்க வெளியே வந்து இப்படியான ஒரு படத்தில் நடித்திருப்பது பெரும் துணிச்சல்.மிகப்பெரிய சாதனையை சர்வ சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்ட வேண்டும்.அஜித்தின் இந்தப் படம், அவரது ரசிகர்களை மட்டுமல்ல, பொதுவான சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்க்கும்.படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்த வசனங்களால் மிக அழுத்தமாக கூறியுள்ளனர்,    இயக்குநர் வினோத்,ஆண் – பெண் இருவர் குடிப்பது தப்பு”, “ஒரு பொண்ணு ‘நோ’ன்னு சொன்னா, அது காதலியாக, தோழியாக, பாலியல் தொழிலாளியாக ஏன் மனைவியாக இருந்தாலுமே ‘நோ’ன்னுதான் அர்த்தம்” என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் துணிச்சல்.ஏற்படுத்தக்கூடும்.
ஷ்ரத்தா ஒவ்வொரு முறையும் அவர் தனக்காக யாராவது உதவி செய்வார்களா, இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முடியுமா? என்று அவரின் பதட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இருக்கிறது.  ஸ்ரதா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா , அபிராமி இன்றைய நவீன பெண்களின் மனசாட்சியாக திரையில் பிரதிபலித்திருக்கிறார்கள்.
யுவனின்  பாடல்கள் படத்தை தாங்கி நிற்கின்றார், அதேபோல் நீரோவ்ஷா ஒளிப்பதிவு
நேர்கொண்ட பார்வை   –   -அஜித் ரசிகர்களின் பார்வை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img