நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் கனெக்ட்
கொரோனா காலத்தில் ஒரு குழந்தைக்கு பேய் பிடித்து அதை விரட்டுவது தான் கதை இந்த ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர்
நயன்தாராவின் மகள் தந்தை மீது பாசம் அதிகம் மிக்கவர் தந்தை ஒரு மருத்துவர் கொரோனா நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும்போது கொரோனா தாக்கத்தினால் மரணம் அடைகிறார் தந்தை மீது பாசம் உள்ள மகள் தந்தை ஆவியிடம் பேச மீடியம் மூலம் முயற்சிக்க முயற்சி வேறு விதமாக மாறி ஒரு கெட்ட பேய் அவள் உடம்பில் புகுந்து கொள்கிறது’
அதை பாதிரியாராக வரும் அனுபவம் கேர் வீடியோ கால் மூலம் அந்த பேயை விரட்டி அடிக்கிறார்
நம்ப முடியாத கதை நம்பக்கூடிய அளவுக்கு திரைக்கதை அமைத்து ஏமாற்றத்தை தந்திருக்கிறார் இயக்குனர்
இந்த கதைக்கு நயன்தாரா தேவை என்றால் தேவையில்லை ஆனால் தயாரிப்பு நிறுவனம் அவர் கணவருடையது என்பதால் இதில் நடித்திருக்கிறார் என்று நாம் நினைக்கிறோம்
படத்தில் 75% காட்சிகள் வீடியோ கால் தான் கால் சீட் பிரச்சனையை ஈசியாக சமாளித்து இருக்கிறார் இயக்குனர்
நயன்தாரா ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக கிறிஸ்துவ மதத்தை பரப்பும் நபர் போல் நமக்கு தோன்றுகிறது இந்த படத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்
கனெக்ட் -கனெக்ட் ஆகவில்லை