spot_img
HomeNewsடாடா விமர்சனம்

டாடா விமர்சனம்

பிக் பாஸ் புகழ் கவின் அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டாடா

கவினும் அபர்ணாதாசம் கல்லூரியில் படிக்கும் போது காதலிக்கின்றனர் காதல் கர்ப்பத்தில் முடிய காவல் நிலையம் செல்லும் பெற்றோர் இருவரையும் வேண்டாம் என்று ஒதுக்கி விடுகின்றனர் கவின் கர்ப்பத்தை கலைக்க சொல்ல

முடியாது என்று அபர்ணாதாஸ் சொல்லு நண்பனின் கெஸ்ட் ஹவுஸில் வாழ்க்கை தொடங்க கவின் ஒரு பத்தாயிரம் சம்பளத்தில் வேலைக்கு செல்ல நண்பனின் வீடு குடிகார வீடாக மாற பிடிக்காத அபர்ணாதாஸ் வாடகை வீட்டிற்கு செல்ல இருவருக்கும் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன

நிறை மாத கர்ப்பிணி அபர்ணாதாஸ் பிரசவ வழியில் துடிக்கும் நேரத்தில் கவினுக்கு போன் செய்ய கவின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்கிறான் அக்கம் பக்கத்து வீட்டார் உதவியுடன் அபர்ணாதாஸ் மருத்துவமனையில் சேர விஷயம் அறிந்த கவின் மருத்துவமனைக்கு வர அங்கு குழந்தை மட்டும் தான் இருக்கிறது அபர்ணாதாஸ் இல்லை

தன்னந்தனியாக குழந்தையை வளர்க்கிறான் கவின் அபர்ணாதாஸ் கவின் இடம் தேடி வந்தாளா
கவின்
அபர்ணாதாஸ் தேடி சென்றானா

மகன் தாயை தேடினானா

என்பதை காண பாருங்கள் டாடா

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அறிமுக மாதிரி தெரியவில்லை பண்பட்ட இயக்குனர் போல் திரைக்கதையும் வசனங்களையும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளையும் எதார்த்தமாக எளிமையாக கையாண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார்

தமிழ் சினிமா உங்களை சிவப்பு கம்பளம் விரித்து உங்களை வாழ்த்துகிறது

கவின் இளம் நாயகனாக இருந்து கொண்டு முன்னணி கதாநாயகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு நடிப்பை தேக்கி வைத்திருக்கிறார் திறமையுள்ள இயக்குனர்கள் அவரை மேலும் மெருகேற்றலாம் காதலும் சரி சோகமும் சரி நகைச்சுவையும் சரி என விதவிதமாக முக பாவங்களை பிரதிபலிக்கிறார்

அவருடன் போட்டி போடும் அபர்ணாதாஸ் முகத்தில் மலையாள வாடை வீசினாலும் நடிப்பில் நவரசமும் தெளிக்கிறார்

கவின் நண்பனாக வருபவர் இப்படி ஒரு நண்பன் நமக்கு கிடைக்காதா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு தன் திறமையை வெளிப்படுத்தி

உள்ளார் பாக்கியராஜ் ஐஸ்வர்யா இன்னும் பலர் அவர் ஒரு பங்கை அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்

இசை ஜென் மார்ட்டின் உணர்ச்சி குவியலுக்கேற்ற ஒரு ரீங்காரம் முதல் படம் என்றாலும் இசைக்கு வயது ஏது

டாடா எதார்த்தத்தின் உண்மை

Must Read

spot_img