கஸ்டடி’ படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ராஜூ (எ) ராசு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
முன்னணி இயக்குநரான வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி இருக்கும் ‘கஸ்டடி’ படத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் பலருக்கும் பிடித்திருந்தது மற்றும் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திர போஸ்டர் படம் குறித்தான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. திறமையான நடிகரான அரவிந்த் சுவாமியின் கேரக்டர் போஸ்டரை இன்று தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தில் ராஜு என்ற ராசு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் வலுவான கதாபாத்திரம் மற்றும் பாரில் கைவிலங்குடன் இந்த போஸ்டரில் அரவிந்த் சுவாமி இருக்கிறார். இந்த அச்சுறுத்தும் தோற்றம் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ப்ரியாமணி பவர்ஃபுல் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அக்கினேனியின் சினிமா பயணத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் ‘கஸ்டடி’யும் ஒன்று. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார். அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பவன்குமார் வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
கஸ்டடி மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.
நடிகர்கள்: நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்,
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சிவா, மகேஷ் மேத்யூ,
கலை இயக்குநர்: டிஒய் சத்யநாராயணா,
மக்கள் தொடர்பு: வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா