சசிகுமார் ப்ரீத்தி அசுராணி யாஷ்பால் சர்மா நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அயோத்தி
அயோத்தி என்றால் பிரச்சனைக்குரிய படம் என்று நினைக்க வேண்டாம் நம்மிடம் இருக்கும் பல பிரச்சினைகளை தீர்க்கும் படம்
கதை களத்திற்கு வருவோம் அயோத்தியில் வசித்து வரும் தீவிர மதப் பற்று கொண்ட யாஸ் பால் சர்மா தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் தீபாவளி அன்று ராமேஸ்வரம் செல்ல மதுரையிலிருந்து வாடகை கார் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்
விடிவதற்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் யாஷ் பால் சர்மா டிரைவரை வேகமாக ஓட்ட சொல்ல வாய் பேச்சு கைகலப்பாகி வண்டி விபத்துக்குள்ளாகி யாஷ் பால் சர்மாவின் மனைவி மரணம் அடைகிறார்
எதிர்பாராத மரணத்தால் நிலைகுலைந்து போன யாஷ் பால் சர்மா மனைவியின் சடலத்தை சொந்த ஊரில் அடக்கம் செய்ய முயற்சிக்க நாயகன் சசிகுமார் அதற்கு உதவுகிறார் ஆனால் அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் பிரச்சனைகளை தீர்த்து சடலத்தை அயோத்திக்கு நாயகன் சசிகுமார் அனுப்பி வைத்தாரா என்பது மீதி கதை
நாயகன் சசிகுமாருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தரமான படத்தில் நடிதற்கு மக்களின் ஆதரவும் விருது நிச்சயம் என நம்பிக்கை நமக்கு இருக்கிறது
சடலத்தை கார்கோவில் அனுப்ப ஃபார்மாலிட்டிஸ் விஷயங்களை விமான நிலைய அதிகாரி சொல்லும்போது அதை இன்று தந்தால்தான் சடலத்தை இன்று அனுப்ப முடியும் இல்லை என்றால் முடியாது என்று சொல்ல அவர் சொன்ன அனைத்து ஃபார்மாலிட்டிஸ்கான சர்டிபிகேட் க்காக சசிகுமார் எடுக்கும் முயற்சி பார்க்கும் நம்மை பரபரப்பாகவும் அதே நேரத்தில் ஒரு பரிதாப பட வைக்கவும் செய்கிறார்
தீபாவளி நாள் என்பதால் சர்டிபிகேட் கையெழுத்து வாங்க அவர் படும் பாடு நம்மை உச்கொட்ட வைக்கிறது
யாஸ் பால் சர்மா மனைவி மகள் அனைவரும் தன் அடிமைகள் என்று நினைக்கும் ஆணாதிக்கத்தின் அடுத்த அவதாரம் இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தால்தான் விமானத்தில் ஏற்ற முடியும் என்று நிலை இருக்கும்போது போஸ்ட்மார்ட்டம் செய்வது எங்கள் மதத்திற்கு எதிரானது என்று தடுக்கும் போது பழமைவாதிகளுக்குள் ஒரு மதவாதி இந்த கதாபாத்தில் யாஷ் பால் சர்மா நடிப்பு சபாஷ் போட வைக்கிறது
மகளாக ஒரு ப்ரீத்தி அசுராணி போஸ்ட் மாடத்தை எதிர்க்கும் தந்தையிடம் சண்டையிடும் காட்சி நடிப்பு ராட்சசியாக பின்னி பெடல் எடுக்கிறார்
தம்பியாக வரும் சிறுவன் இவர்களுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பது போல் தாயின் சடலத்தை போஸ்ட் மாடம் செய்த மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்கும் போது தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை உடைத்து தரும் காட்சி பார்ப்பவரை கண்கலங்க வைக்கிறது
கதை ராமகிருஷ்ணன் சிறந்த கதையை தன் வலிமையான திரைக்கதையால் மெருகேற்றி இயக்கியிருக்கும் மந்திரமூர்த்தி தமிழ் சினிமாவுக்கு வரவு என்றாலும் இவரால் தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
இறுதிக்காட்சியில் மனம் திருந்தி யாஷ்ப்பால் ஷரமா சசிகுமாரிடம் உன் பெயர் என்ன என்று கேட்கும் போது அவர் கூறும் பதில் பார்க்கும் நமக்கு இருக்கை நுனிக்கு வர வைக்கிறது
அயோத்தி பாபர் மசூதிக்குள் ஒரு ராமர் கோயில்