spot_img
HomeNews‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது

நவீன் பொலிஷெட்டி, அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது

இரண்டு திறமையான நடிகர்களான நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்காவின் காமெடி எண்டர்டெயினரான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அனுஷ்கா மற்றும் நவீனின் கதாபாத்திர இறுதிப்பெயர்களைக் கொண்டு ‘மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர். பொலிஷெட்டி’ என இந்தப் படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளதை இந்தப் போஸ்டர் உறுதி செய்கிறது. இந்தப் போஸ்டரில் அனுஷ்கா ‘ஹேப்பி சிங்கிள்’ என்ற புத்தகத்தையும் இன்னொருபுறம், நவீன் ’ரெடி டூ மிங்கிள்’ என்ற ஹூடியுடனும் இருப்பது இந்த போஸ்டரை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. அனுஷ்கா இந்தப் போஸ்டரில் அற்புதமாகவும் நவீன் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார். இவர்களின் இந்த கெமிஸ்ட்ரிதான் படத்திற்கு முக்கிய உந்துதலாக இருக்கும்.

மகேஷ் பாபு பி இந்தப் படத்தை இயக்க, யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் புதுமையான, கிரியேட்டிவ் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் படத்தின் அடுத்தடுத்த புரோமோஷனுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. இப்போது வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர் படம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதை உறுதி செய்கிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Must Read

spot_img