“மைக்கேல் தேவி அனுபமா அப்சல் அஹமத் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் என் 4 n4 என்றால் என்ன அது காசிமேடு பக்கத்தில் இருக்கும் காவல் நிலையம்
சரி கதைக்கு வருவோம் காசிமேடு மீனவ குப்பத்தில் ஒரு கண்ணம்மா பாட்டியிடம் சூர்யா சௌந்தர்யா கார்த்தி அபிநயா ஆகியோர் வளர்ப்பு பிள்ளைகளாக வளர்ந்து வந்து காசிமேடு மீனவ குப்பத்தில் மீன் கூடை தூக்கி பிழைப்பு நடத்தி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன
சூர்யாவை சௌந்தர்யாவை காதலிக்க கார்த்தி அபிநயாவை காதலிக்க சந்தோசப் பறவைகளாக வலம் வர அவர்கள் மகிழ்ச்சியில் ஒரு துயரமான சம்பவம் நடக்கிறது இரவு காட்சி பார்த்துட்டு வரும்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் கொண்டு அபிநயாவை துளைக்க அவளுக்கு ஒரு மேஜர் ஆப்ரேஷன் செய்தால் பிழைக்க வழி இருப்பதாக மருத்துவர்கள் கூற பணத்தை ஏற்பாடு செய்ய அவர்கள் குடும்பம் முயற்சி செய்யும் நேரத்தில் N4”காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் பாத்திமா மகன் நரம்பியல் வியாதி சம்பந்தமாக அடிக்கடி வலிப்பு வர அவர் மகனுக்கும் ஆபரேஷன் செய்ய அஞ்சு லட்சம் தேவைப்படுவதாக மருத்துவர் கூற பணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆய்வாளர் பாத்திமா பல முயற்சிகள் செய்தும் பணம் கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் அபிநயாவை சுட்ட காலேஜ் மாணவர்கள் சந்தர்ப்பவாசத்தால் ஆய்வாளர் பாத்திமாவின் சிக்க உதவி ஆய்வாளர் அவர்களிடம் பணம் லஞ்சமாக பெற்று மகனின் ஆபரேஷன் செய்யுமாறு கூற அரை மனதுடன் ஆய்வாளர் பாத்திமா சம்மதிக்கிறார்
கேசை திசை திருப்ப கள்ள நோட்டு என பொய் கேஸ் போட்டு கார்த்தியும் சௌந்தர்யாவையும் உதவி ஆய்வாளர் லாக்கப்பில் வைக்க குற்ற உணர்வில் ஆய்வாளர் பாத்திமா அவர்களை காப்பாற்றும் போது ஒரு உண்மையை கூற ஒரு அதிர்ச்சிஅந்த அதிர்ச்சி என்ன பாருங்கள்
சூர்யாவாக வரும் மைக்கேல் காசிமேடு பகுதி ஏற்ற உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்புகளும் அவரை ஒரு காசிமேடு மீனவனாக காட்டுகிறது காதலிக்கும் போது சந்தோசத்தையும் தம்பியை அடித்த காதலியின் மீது கோபத்தையும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார் தமிழ் திரை உலகில் எதிர்காலத்தில் ஒரு எதிர்பார்ப்பு நாயகனாக வருவது உறுதி
அவர் காதலியாக வரும் சுந்தரி சீரியல் நாயகி அட அட அட அட அட அட அட அட அட அசத்தலோ அசத்தல் அவ சுந்தரி சீரியல் நடிக்கவில்லை என்றால் உண்மையிலேயே ஒரு காசிமேடு பெண்ணே நடிக்க வைத்து இருக்காரு இயக்குனர் என நமக்கு தோன்றியிருக்கும் அந்த அளவுக்கு பின்னி பெடல் எடுத்திருக்கிறார்
உதவி ஆய்வாளரிடம் அவர் கோபப்படும் காட்சி தத்துரூபமாக இருந்தது கண்ணம்மாவாக வடிவுக்கரசி மறைந்த காந்திமதியை நமக்கு நினைவு படுத்துகிறார்
அவர் கணவராக வரும் வேலு எனும் அழகு எதற்காக வடிவ கரிசியை விட்டு சென்றார் பிறகு எதற்காக திரும்பி வருகிறார் என்பது இயக்குனருக்கு வெளிச்சம் ஆய்வாளராக வரும் அனுபமா குமார் படம் முழுக்க ஒரு சோகமான முகம் காரணம் மகனின் உடல்நிலை ஒரு ஆய்வாளர் மருத்துவ செலவுக்கு 5 லட்சம் புரட்ட முடியவில்லை என்பது நம்மால் நம்ப முடியவில்லை அதற்குக் காரணம் அவரின் நேர்மை
மருத்துவ காப்பீடு அலுவலகத்தில் அவர் கெஞ்சுவது பார்த்து நாம் பார்ப்பது சினிமா என்பது நமக்கு அடிக்கடி ஞாபகம் வருகிறது
மற்ற கதாபாத்திரங்களும் அவர்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றனர்
வடசென்னை காசிமேடு பகுதியை அதுவும் மீன் சந்தையை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் ரசிக்கும்படியாக காட்டி இருக்கிறார் இயக்குனர்
அதே சமயம் அங்கு நடக்கும் கலவரங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடுகள் என்ன வடசென்னை வாழ்வியலை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆனால் படம் ஆரம்பித்து இடைவெளியின் போது தான் படத்தின் கதையே ஆரம்பிக்கிறது அதுவரை நகரும் காட்சிகள் டைட்டில் பாடலைத் தவிர மற்றவை நம்மை கொட்டாவி விட வைக்கிறது
N _4- வாடை இல்லாத கருவாடு
Cast
Micheal Thangadurai as *Surya*
Gabriella Sellus as *Soundharya*
Vinusha Devi as *Abinaya*
Anupama Kumar as *Fathima*
Afsal Hameed as *Karthi*
Akshay Kamal as *Vijay*
Pragya Nagra as *Swathi*
Vadivukkarasi as *Kannamaa*
Abhishek Shankar as *Rajarathinam*
Azhagu as *Velu*
Crew:
Director – Lokesh Kumar
Cinematographer – Divyank
Editor – Dani Charles
Music director – Balasubramanian G
Sound design – Gokul Dev
Sound mixing – Naveen Shankar
Producers – Naveen Sharma,
Lokesh Kumar
Production Company – Dharmraj Films0