காமெடி நாயகன் சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் படம் விடுதலை வெற்றிமாறனின் வெற்றி வரிசையில் வெளிவந்திருக்கும் படம் விடுதலை
கதைக்களம் 1987 இல் ஆரம்பிக்கிறது தர்மபுரி மாவட்டத்தின் மலைவாழ் வாழ்வாதாரத்தை குலைக்கும் வண்ணம் அங்கு சுரங்க நிறுவனம் ஒன்று அமைக்க பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு அதை நிறுவ முற்படும் நேரத்தில் மக்கள் இயக்கம் எனப்படும் இயக்கம் அதை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது
அவர்களை ஒடுக்கி கைது செய்ய காவல்துறை அனுப்பப்படுகிறது காவலர்களுக்கு ஜீப் ஓட்டும் காவலாளியாக வருகிறார் நாயகன் சூரி காவல்துறை தீவிரவாதிகளை கைது செய்கிறோம் என்ற போர்வையில் அப்பாவி மலைவாழ் மக்களை துன்புறுத்துகிறது இதை அறிந்து அங்கு மேலதிகாரியாக வருகிறார் கௌதம் வாசுமேனன் அவர் தீவிரவாதிகளை கைது செய்தாரா என்பதை மீறி கதை
நாயகன் சூரி தன் உடல் மொழிகளை மாற்றி ஒரு யதார்த்த நாயகனாக தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார் தான் ஓட்டும் ஜிப்பில் கரடி கடித்த வயதான பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதற்கு மன்னிப்பு கேள் என்று அதிகாரி சொல்லும்போது தவறு செய்யாததற்கு மன்னிப்பு கேட்க முடியாது என சூரி தன்னிலை விளக்கம் அளிக்க மேலதிகாரி கொடுக்கும் தண்டனை அதிகார வர்க்கத்தின் அட்டகாசங்களை தோலுரித்துக் காட்டுகிறது
படத்தின் இறுதி வரை மன்னிப்பு கேட்காமல் கதாநாயகன் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்
நாயகன் சூரி தன் காதலியை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்யும் போலீஸ் அதிகாரியிடம் தீவிரவாதிகளில் நான் பிடித்து தருகிறேன் 10 பேரை என்னுடன் அனுப்புங்கள் என்று அவர் கூறும் வசனம் இயலாமையில் ஒரு நம்பிக்கை என்பது போல் நம்மை பரிதவிக்க வைக்கிறார் காமெடி நாயகனாக இருந்த சூரி கதையின் நாயகனாக உயர்த்திய பெருமை வெற்றி மாறனையே சேரும்
நாயகி பவானி ஸ்ரீ மலைவாழ் பெண்ணுக்குரிய முகம் காதலை வெளிப்படுத்துவதும் கண்களால் பேசுவது என மிக அழகாக நேர்த்தியாக தன் நடிப்பு வழங்கி இருக்கிறார்
போலீஸ் அதிகாரியாக சேத்தன் படம் முழுக்க இவர் ராஜ்ஜியம் தான் அலட்டாமல் அசராமல் அழகாக போலீஸ் அதிகாரிக்கு ஏற்ற திமிர்த்தனத்தையும் தெனாவட்டையும் அடக்கு முறையையும் கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல் நடிப்பில் மிளிருகிறார்
பெண்களை கைது செய்து நிர்வாணமாக்கி அவர்களிடம் உண்மையை வாங்க செய்யும் அட்டூழியம் நாம் 87 காலகட்டத்தில் பத்திரிக்கையில் படித்த செய்திகளை நம் கண் முன் நிறுத்துகிறது
விஜய் சேதுபதி மக்கள் படை தலைவராக இவரின் பங்களிப்பு விடுதலை பாகத்தில் ஒன்றில் குறைவு என்றாலும் படத்தில் நிறைவாக செய்திருக்கிறார் இரண்டாம் பாகத்தில் இவரின் அட்டகாசம் ஆரம்பிக்கும் என்று படத்தின் இறுதியில் கட்டப்படும் சில காட்சிகளை நிச்சயம்
பாசிச அரசியலையும் காவல் துறையின் அராஜக அடக்க முறைகளையும் கடை நிலைய ஊழியர்களின் கஷ்டங்களையும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை அவலங்களையும் நம் கண் முன் நிறுத்துகிறார் வெற்றிமாறன்
விடுதலை —— கிடைக்கவில்லை