spot_img
HomeNewsரேசர் விமர்சனம்

ரேசர் விமர்சனம்

அகில் சந்தோஷ் லாவண்யா பாலா மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் ரேசர்
கதைக்களம் நாயகன் சிறுவயது பள்ளியில் படிக்கும் போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசை சைக்கிள் கிடைத்தவுடன் பைக் ஓட்ட ஆசை பைக் ஓட்டும்போது பைக் ரேசர் ஆக ஆசை அவன் ஆசைக்கு தடை போடும் தந்தை தந்தைக்குத் தெரியாமல் பைக் ரேஸில் கலந்து வெற்றி வாகை சூட நாயகன் முயற்சிக்க அவர் முயற்சி வெற்றி அடைந்ததா என்பதை மீதி க்கதை

நாயகனாக வரும் அகில் சந்தோஷுக்கு தமிழ் நாயகனுக்குரிய கலையான முகம் நடிப்பும் எதார்த்தம் பைக் வாங்க அவர் தந்தையிடம் அவர் நடத்தும் நாடகம் ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்க்கையில் அனுபவித்ததை இயக்குனர் திரையில் காட்டி இருக்கிறார்

அது மட்டும் அல்லாமல் வேலைக்கு சேரும் நாயகன் ரேசில் ஓட்ட பைக் வாங்க லோன் போட்டு பைக் வாங்கி அதை நண்பன் பைக் என்று வீட்டில் சொல்லும்போது உன் பெயரில் லோன் போட வேண்டும் என்று தந்தை கூறும் போது எடுத்து லோனே கட்ட முடியாமல் தவிக்கும் போது புதிதாக எப்படி லோன் போடுவது என்று தெரியாமல்  நண்பர்களிடம் கடன் வாங்கி தந்தையிடம் தந்து அந்த கடனை அடைக்க ஃப்ரீ டைமில் உணவு சப்ளை செய்யும் வேலையில் இறங்கி நாயகன் படம் பாடு அப்பப்பா என்று சொல்ல வைக்கிறார் நாயகன் அகில் சந்தோஷ்

பைக் ரேஸில் கலந்து கொண்டு முதல் முயற்சியில் தோல்வியை தழுவி பிறகு முறையாக பயிற்சி பெற்று ரேசில் கலந்து கொள்ளும் போது நாமே அந்த ரேசில் கலந்து கொள்வது போல் ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
அது மட்டும் இல்லை ஸ்ட்ரீட் ரேஸ் என பல ரேஸ்கள் இருப்பதை வகை வகையாக நமக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார் பைக் ரேஸில் எத்தனை வகை உண்டு என்பது படம் பார்க்கும் பொழுது தான் நமக்குத் தெரிந்தது அதை அழகாக கையாண்டு அதன் நியாயதர்மங்களை நமக்கு தெளிவுபடுத்தி அருமையாக திரைக்கதை நகர்த்தி சென்று இருக்கிறார்

படத்திற்கு நாயகி தேவை என்பதற்காக ஒரு நாயகி படத்தில் இருக்கிறார் ஆடலும் பாடலும் வழக்கமான சினிமா
இருந்தாலும் இயக்குனர் புது முயற்சிக்கு நம்முடைய வாழ்த்துக்கள்

  ரேஸ் சினிமாவும் ஜெயிக்க வேண்டும்

*Racer Movie Cast & Crew*
Akil santhosh as Ashwin(Hero)Lavanya as Lavanya(Heronie)Aaru Bala as Mechanic siva(Mechanic hero well wisher)Subramanian as Moorthy(Hero Father)Parvathy as Parvathy(Hero Mother)Sarath as Akil Friend(Friend of Hero)Nirmal as Nirmal(Friend of Hero)Sathish as Sathish(Friend of Hero)Arvind as Sam(Villan)Anees as Robin(Coach)
*Crew*
Producer – Kartik Jayas  “Hustler’s Entertainment “Co producer- santhosh Krishnamurthy“Redal media works”Director – Satz RexDOP – Prabhakar Editing – Ajith NMMusic – BarathStunt – Cheenu Rex, Satz RexArt Director – Kani AmudhanCo- Director – AJAssociate Editor – Yogesh VPRO – Velu

Must Read

spot_img