மணிகண்டன் ரமேஷ் திலக் மீத்தா ரகுநாத் பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடிக்க விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் குட் நைட்
கதைக்களம் நாயகன் மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது அந்த குறட்டையினால் அவன் வேலை காதல் என பல பிரச்சினைகளை எதிர்கொளிக்கிறான் இந்நிலையில் மீத்தா ரகுநாத் மீது மணிகண்டனுக்கு காதல் ஏற்பட கல்யாணத்தில் முடிகிறது திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் குறட்டை பிரச்சனையால் தூக்கம் இழந்த நாயகி அலுவலகத்தில் மயக்கம் அடைந்து விட அவளின் மயக்கத்திற்கு காரணம் தூக்கமின்மை தான் என்று டாக்டர் சொல்ல மணிகண்டன படுக்கை அறை இரண்டாகிறது
அன்யோனியத்திற்கு அணை போடப்படுகிறது
வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கிறது
குண்டூசி கடப்பாரை போல் தெரிகிறது
விரிசலின் விபரீதம் நாயகியை துபாய் செல்ல நிர்பந்திக்கிறது
மனம் திருந்தும் நாயகன் நாயகி உடன் இணைந்தானா என்பதே மீதி கதை
குறட்டை எனும் சிறு விசயத்தை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் சிறந்த திரைப்படமாக நமக்கு அளித்த இயக்குனர் பாராட்டியே ஆக வேண்டும் அந்தக் குறட்டைக்குள் காதல் பாசம் சோகம் பிரிவு நேசம் என பல பரிமாணங்களை ரசிக்கும்படியாக அழகாக திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்
நாயகன் மணிகண்டன் ‘இவன் வேற மாதிரி’ ஆம் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் உலக நாயகனுக்கு போட்டி போடும் அளவுக்கு சிறப்பாக செய்து இருக்கிறார்’
முதல் இரவு முடிந்த காலையில் மனைவி ஓடிப் போய் விட்டார் என்ற பதட்டத்தில் அவர் தேடுவதும் மனைவியை பார்த்ததும் சமாளிப்பதும் ஒரு சிறந்த நடிகனுக்கு உரிய கைத்தட்டளை பெறுகிறார் நவரசத்தையும் தன் முகம் பாவங்கள் மூலம் பிரதிபலித்து எதிர்கால முன்னணி நாயகன் வரிசையில் இடம் பிடிக்க இந்தப் படத்தின் மூலம் கோடு போட்டு உள்ளார்
வாழ்த்துக்கள்
நாயகி மீத்தா ரகுநாத் அப்பாவியான முகம் கண்கள் மூலமே பல வசனங்களை பேசுகிறார் எதார்த்தத்தின் எளிமையான நாயகி
ரமேஷ் திலக் மணிகண்டனின் அக்கா கணவனாக மாமா மச்சான் உறவு முறை ஒரு நடுத்தர குடும்பத்தின் பிரதிபலிப்பு ரமேஷ் திலக் மணிகண்டன் இருவரின் காட்சிகளும் அரங்கத்தின் கரவொலி சத்தங்கள் தான்
குட் நைட்– விடியலின் ஆரம்பம்