spot_img
HomeNewsதீரா காதல் விமர்சனம்

தீரா காதல் விமர்சனம்

ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் ஷிவதா மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் தீரா காதல்
கதைக்களம் கல்லூரி காலத்தில் காதலித்து காதலில் சேராமல் போன ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றவர்களுடன் தங்கள் திருமணம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகு ரயில் பயணத்தில் சந்திக்க போது நினைவுகளை பகிர்ந்து பிரிகின்றனர்

ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கையில் விரும்பத்தக்காத நிகழ்ச்சிகள் சில நிகழ்வுகள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துவிட்டு தன் பழைய காதலன் ஜெயியை தேடி வர ஜெய்யின் சந்தோஷமான வாழ்க்கையில் ஒரு புயல் வீசத் தொடங்குகிறது இருவரும் சேர்ந்து வாழலாம் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெயியை பலவந்தப்படுத்த ஒத்துக் கொள்ளாத ஜெய் மீது பல இடையூறுகளைத் தர இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் வென்றார் அல்லது ஜெய் வென்றாரா என்பதே மீதி கதை

ஜெய் பழைய காதலியை பார்க்கும் போது ஏற்படும் உணர்வுகளின் வெளிப்பாடுகளையும் ஒரு கணவனாக தந்தையாக தன் மகள் மீதும் தன் மனைவி மீதும் காட்டும் அன்பின் மீதும் உள்ள வித்தியாசத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார்

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெண்மைக்கு இழுக்கு சேர்ப்பதாக இருந்தாலும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்திருக்கிறார்

இந்த படத்தைப் பொறுத்தவரை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்றாலும் எதிர் நாயகியும் அவரே தான்

ஷிவதா ஒரு நடுத்தர குடும்ப தலைவியாக மகளுக்கு தாயாக கணவனுக்கு மனைவியாக அலுவலகம் செல்லும் அவசர பெண்மணியாக தன் கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்

ஒரு உயர்தரமான கள்ளக்காதலை கள்ளக்காதல் என்று கூறாமல் காதலின் நினைவலைகள் நீங்காதது என திரைக்கதையில் சொல்ல வந்து தோல்வி அடைந்திருக்கிறார் இயக்குநர்

கதாபாத்திரம் கதாபாத்திரத்தின் தன்மை அதை கையாண்ட விதம் மிகுந்த ஏமாற்றம்

தீரா காதல்– காதலுக்கு ஒரு இழுக்கு

Must Read

spot_img