ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரப்பில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘மிஷன் மங்கல்’. செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது.
இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுயது குறித்து ‘மிஷன் மங்கல்’ இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் மிஷனை, அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயற்றுவது எளிதல்ல, இது இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும். ஜெகன் சக்தி இந்தப் படத்திற்கு தகுதியான கலைஞர்களைக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இதில் அக்ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மன் ஜோஷி என திறன் வாய்ந்த நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் ஜெகன் சக்தி அவரது இந்த படத்தை இயக்க உதவியதற்காக இந்தியாவின் முதன்மை விண்வெளி ஏஜென்சி உறுப்பினர்களையும் பாராட்டுகிறார்.
‘மிஷன் மங்கல்’ படத்தினைப் பற்றி ஜெகன் சக்தி கூறுகையில், “என் சகோதரி சுஜாதா [கிருஷ்ணா] அங்கு பணிபுரிகிறார், எனவே மங்கல்யான் மிஷன் குழுவுடன் விரிவான நேர்காணல்களைச் செய்ய முடிந்தது. இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அணுகலை வழங்குவதில் இஸ்ரோ மிகவும் உதவியாக இருந்தது. மறுபுறம் கலை இயக்குனர் மற்றும் வி.எஃப்.எக்ஸ் குழு, படத்தின் மிக முக்கியமான அங்கமாக இருந்த ராக்கெட்டை வடிவமைக்க எங்களுக்கு உதவினர். எங்களிடம் சரியான வரைபடங்கள் இருந்தபோதிலும், இதேபோன்ற தோற்றமுடைய சாதனத்தை எங்களால் அவர்கள் இல்லாமல் வடிவமைத்திருக்க முடியாது. ”
படப்பிடிப்பின் போது ஏற்றப்பட்ட சவால்களை பற்றி இயக்குநர் ஜெகன் விவரிக்கையில், “நாங்கள் இஸ்ரோவின் வளாகத்தில் [பெங்களூரில்] படப்பிடிப்பு நடத்த ஆர்வமாக இருந்தோம், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் அதை அனுமதிக்க முடியவில்லை. ஆனால் பணி குறித்த முக்கிய குறிப்புகள் பெரும்பாலானவை வலைத்தளங்களில் கிடைக்கின்றன . இறுதியில், நாங்கள் இந்த திரைப்படத்தை மிகவும் நன்றாக இயக்கியுள்ளோம். நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது. இந்த மிஷன் மங்கல் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கல்யான் பற்றியது, இந்த பணி ஒரு கூட்டு வெற்றியாகும், மேலும் அதன் வெற்றி அனைவரது வெற்றி என்பதால் இந்தப் படம் சுயசரிதையாக மாற்றவில்லை என ஜெகன் விவரித்தார்.
மிஷன் மங்கல் என்பது செவ்வாய் கிரகத்திற்காக இந்தியா அனுப்பப்பட்ட முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். இது உலக அளவில் பாராட்டப்பெற்ற ஒரு சாதனை, மேலும் அது அதன் முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது. இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. ஹிந்தி மொழியில் வெளிவர இருக்கும் இப்படம் தமிழ் & தெலுகு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது .
இயக்குனர் – ஜெகன் சக்தி
எழுத்தாளர் &கிரியேட்டிவ் இயக்குநர் – ஆர் பால்கி
தயாரிப்பு -ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ,கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ்
வழங்குவது – ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
இசை – அமித் திரிவேதி
ஒளிப்பதிவு – ரவி வர்மன்
எடிட்டிங் – சந்தன் அரோரா