spot_img
HomeNewsபோர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

அசோக்செல்வன் சரத்குமார் நிகிலா மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் போர் தொழில்

கதை களம் திருச்சியில் ஒரே மாதிரி சில பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட போலீஸ் விசாரணையில் துப்பு துலங்காமல் கேஸ் சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்படுகிறது

பல குற்றங்களை கண்டுபிடித்த சீனியர் ஆபீசர் சரத்குமாரிடம் இந்த கொலை கேஸ் ஒப்படைக்கப்படுகிறது அவருடன் பயிற்சி ஆபிசர் அசோக் செல்வன் உடனினைந்து பணியாற்ற இருவரின் கருத்துக்கள் வேறுபாட்டில் இருக்கும் போது ஒத்த கருத்துடன் இருவரும் இணையும்போது கொலைக்கான காரணங்கள் தெரியவர கொலைகாரனை நோக்கி கண்டுபிடிக்கும் தருணத்தில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அவர்களுக்கு தெரிய வருகிறது

அது என்ன
கொலைகாரன் யார்
என்பதே மீதி கதை
சரத்குமார் தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த போர் தொழில் கதாநாயகனுக்கு இணையாக இணை நாயகனாக ஆகிறார் படம் முழுவதும் சரத்குமாரும் அசோக் செல்வனம் இணைந்த பயணிக்கின்றனர் அசோக் செல்வனுக்கு காதலிக்க நாயகி இருப்பதால் அவர் கதாநாயகன் அந்தஸ்தை அடைகிறார் இல்லை என்றால் கதையின் நாயகன் சரத்குமார் தான் தன் நடிப்பாற்றல் மூலம் பல படங்களை வெற்றி படங்களாக்கி சரத்குமார் இந்த படத்தில் எதார்த்தமாக அலட்டலாமா அசால்ட்டாக ஒரு புதிய பரிமாணத்தில் தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்

அசோக் செல்வன் மீசை வைக்காத போலீஸ்காரன் இருட்டு என்றால் பயம் பயத்தில் பாத்ரூம் போக பயம் இந்த பயத்தை போக்கி பயமில்ல காவல்துறை அதிகாரியாக எப்படி மாறுகிறார் என்பதை சிறப்பாக செய்திருக்கிறார்
நிகிலா கதைக்கு தேவையான கதாநாயகி கேஸ் பைல்களை கணினி மயமாக்கும் வேலையில் சரத்குமாருடனும் நாயகனுடனும் பயணிக்கிறார் இறுதியில் கிளைமாக்ஸ் இவர் கையில் தான் அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

இயக்குனர் விக்னேஷ் ராஜா புதுமுக இயக்குனர் ஆனால் இதற்கு முன்பாக சின்னத்திரையில் சில பல விஷயங்களை இயக்கி இருக்கிறார் அதன் அனுபவத்தில் படத்தை இரண்டரை மணி நேரம் தொய்வில்லாமல் நம்மை இருக்கையில் பரபரப்புடன் வைத்திருக்கிறார் பாராட்டுக்கள் விக்னேஷ் ராஜா

ஆனால் கொலைக்கான காரணம் என்பது நமக்கு தெரிய வரும் போது கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது

இருந்தாலும் காவல்துறை துப்பறியும் விதத்தை ஆராய்ந்து சிறப்பாகத் திரைக்கதை அமைத்து ஒரு சிறந்த இயக்குனருக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்

போர் தொழில் –வெற்றி முரசு

Must Read

spot_img