spot_img
HomeNewsவிமானம் விமர்சனம்

விமானம் விமர்சனம்

சமுத்திரகனி மீரா ஜாஸ்மின் நான் கடவுள் ராஜேந்திரன் மாஸ்டர் துருவன் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் விமானம்

கதைக்களம் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் பொதுக் கழிப்பிடம் வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி சமுத்திரகனிக்கு மனைவியை இழந்து தன் ஒரே மகனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார் மகனுக்கு விமானம் என்றால் உயிர்

விமானத்தில் பறக்க வேண்டும் என்பது அவனது நெடுநாள் ஆசை அது மட்டுமல்ல படித்து பைலட் ஆக வேண்டும் என்றும் ஆசை மகனின் மீது அதீத பாசம் வைத்திருக்கும் சமுத்திரகனிக்கு ஒரு ஒரு அதிர்ச்சி சம்பவம் தன் மகனுக்கு பிளட் கேன்சர் என்று தெரிய வர இன்னும் சில நாட்களே உயிர் வாழப் போகும் மகனுக்கு அவனின் ஆசையான விமான பயணம் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார் ஆனால் அவரின் வசதி அதற்கு தடையாக நிற்கிறது இறுதியில் மகனை விமானத்தில் அழைத்துச் சென்றாரா என்பதை மீதி கதை

சமுத்திரகனி ஒரு சிறந்த தந்தையாக சில படங்களில் நடித்து பெயர் பெற்றவர் இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளி தந்தையாக அதுவும் ஒரு ஏழைத் தொழிலாளியாக பாசமிகு அப்பாவாக பல பரிமாணங்களை நமக்கு அள்ளித் தந்திருக்கிறார் தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வார்த்தைகளாலும் கண்களாலும் பிரதிபலிக்கிறார் மகனுக்கு கேன்சர் என்று தெரிந்து அவர் படும் வேதனை நம் மனதை நெருட வைக்கிறது மகனை விமானத்தில் அழைத்துச் செல்ல பணத்திற்காக அவர் படும் பாடு பிள்ளையை பெற்ற ஏழைத் தகப்பன் அனைவருக்கும் அந்த வலி புரிந்திருக்கும்

மகனாக மாஸ்டர் துருவன் விமானத்தை பார்த்து அவன் ரசிக்கும் விதம் நம்மை அவன் வயதுக்கு அழைத்துச் செல்கிறான் சிறுவயதில் நாம் விமானத்தைப் பார்த்து எப்படி சந்தோஷப்பட்டோமோ அதன் பிரதிபலிப்பை அவன் முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறான் சமுத்திரகனியின் நடிப்புக்கு அந்த சிறுவன் ஈடு கொடுத்து பாராட்டுக்குரியது விமான பயணத்தை பற்றி உடன் படிக்கும் சிறுவர்கள சொல்லும் கதை சிறுவர்களுக்கான நகைச்சுவை நம்மையும் சிரிக்க வைக்கிறது

இன்னும் சில கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சொப்பன சுந்தரி ஆக ஒரு விலைமாது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் அவர் கட்டிலில் இடம் பிடிக்கலாம் அதற்காக பணம் சேர்க்கும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அந்தப் பணத்தை சேர்த்து சொப்பன சுந்தரி இடம் செல்லும்போது விமான பயணத்திற்காக குறைவாக இருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அந்தப் பணத்தை தரும் காட்சி மனிதாபமானத்தின் மற்றும் ஒரு சாட்சி

இறுதியில் மகனை சமுத்திரக்கனி விமானத்தில் அழைத்துச் செல்லும் போது மகனின் பரிதாப மரணம் தெரிந்தது என்றாலும் அந்தக் காட்சி தேவை இல்லை என்பது நமது அபிப்பிராயம் விமானம் பறக்கும் போது படத்தை முடித்திருக்கலாம்

விமானம்— வேகம் குறைவு

Must Read

spot_img