spot_img
HomeNewsசார்லஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம்

சார்லஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம்

ஊர்வசி குரு சோமசுந்தரம் கலையரசன் பாலு  வர்கிஸ் மற்றும் பலர் நடிக்க வந்திருக்கும் படம் சார்லஸ் என்டர்பிரைசஸ் மாலைக்கண் நோயுடைய நாயகனுக்கு தாயாராக கணவர் குரு சோமசுந்தரத்தை பிரிந்து வாழும் ஊர்வசி

அவருக்கு பூர்வீக சொத்தை பிரிக்கும் போது கிடைத்த பிள்ளையார் சிலையை வீட்டில் பூஜித்து வழிபடும் பக்தை அந்தப் பிள்ளையார் சிலை மிக அபூர்வமான சிலைகளில் ஒன்றாகும் பல கோடி மதிப்புள்ளது

அதை அடைய நினைக்கும் ஒரு கும்பல்

அந்த சிலையை கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர் கூட்டம் ஒருபுறம்

சிலையை அடைய நினைக்கும் கும்பல் நாயகனின் இயலாமையை பயன்படுத்தி வலை விரிக்க சிலையை திருடுகிறான் நாயகன் அதை காரில் மறைத்து வைக்க சிலையைக் கேட்ட கும்பலைத் தேடி நாயகன் செல்லும்போது அந்த கடத்தல் கும்பலை காணவில்லை என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் நாயகன் உதவிக்கு கலையரசனை அழைக்க கலையரசன் மூலம் அந்த சிலை கைமாறுகிறது மொத்த கதையும் இவ்வளவுதான் மிச்ச கதை எதுவும் இல்லை

படம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப் செய்து வந்திருக்கிறது நாயகனுக்கு ஏன் மாலைக்கண் கதாபாத்திரம் அதனால் அவள் சாதித்தது என்ன இழந்தது என்ன இயக்குனருக்கே வெளிச்சம்

படத்திற்கு கதாநாயகி என்று யாரும் இல்லை கதையின் நாயகியாக ஊர்வசி இருக்கிறார் அவரை தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தது தான் இதில் கொஞ்சம் ஆரவாரம் இல்லாமல் அளந்து நடித்திருக்கிறா ர்

குரு சோமசுந்தரம் மனைவியைப் பிரிந்து வாழும் கதாபாத்திரம் ஏன் பிரிந்தார் என்பது இயக்கனூருக்கு வெளிச்சம்

காரில் வைத்த சிலையை எடுக்க ஏன் இந்த பதட்டம் கதாநாயகனுக்கு என்று தெரியவில்லை ஏதோ அலிபாபா குகைக்குச் சென்று ஏதோ ஒன்று எடுத்து வருவது போல் பில்டப் செய்திருக்கிறார் இயக்குனர்

திரைக்கதையில் நகைச்சுவைக்கான காட்சிகள் இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தாமல் ஏனோ தானோ என்று படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்

படத்தின் டைட்டில் காரணம். கிளைமாக்ஸ் இல் தெரிய வருகிறது மத நல்லிணக்கத்தை சொல்ல வருகிறார் என்பதை தவிர டைட்டிலில் வேறு எந்த புதுமையும் இல்லை

படத்திலும் இல்லை

சார்லஸ் எண்டர்பிரைசஸ் –டப்பிங் படத்தில் ஒரு எண்ணிக்கை கூடுகிறது

Must Read

spot_img