விஜய் ஆண்டனி ரித்திகா சிங் மீனாட்சி ராதிகா மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் கொலை
கதைக்களம் கொலை டைட்டிலை பார்த்தவுடன் புரிந்திருக்கும் இது ஒரு மர்டர் கதை என்று மிகப்பெரிய மாடலிங் நடிகை கொலை செய்யப்படுகிறார் இந்த கொலையை யார் செய்தார்கள் எதற்காக செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்பதின் விரிவாக்கமே கொலை
விஜய் ஆண்டனியை பொருத்தவரை அவர் நடித்த படங்களில் பல படங்கள் கிரைம் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் இந்தப் படத்தில் தன் உடல் மொழியையும் ஒப்பனை அலங்காரங்களையும் மாற்றி ஒரு புதுவித விஜய் ஆண்டனி ஆக அவதாரம் எடுத்திருக்கிறார் ஒரு பக்கம் விசாரணை மறுபக்கம் விபத்தில் சிக்கி பரிதவிக்கும் தன் மகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் தகப்பனாக அவரிடம் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்
அவரின் ஹேர் ஸ்டைல் இந்த படத்தில் ஒரு நியூ ஸ்டைல்
ரித்திகா சிங் கடமை தவறாத பயிற்சி காவல் அதிகாரி மேலதிகாரி கட்டளைக்கு அடி பணிந்து நடக்கும் கதாபாத்திரம் பாத்திரம் அறிந்து நடித்து தன் கதாபாத்திரத்திற்கு பலன் சேர்த்து உள்ளார்
விளம்பர நிறுவனத்தின் அதிகாரியாக ராதிகா சரத்குமார் வயசானாலும்”” அந்த அழகும் கம்பீரமும் ஸ்டைலும் அப்படியே இருக்கு நடிப்பு உட்பட””
முரளி ஷர்மா விளம்பர நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக ஒரு பெண்ணை எப்படி மாடலிங் துறைக்கு அழைத்து வருவது அவளை படுக்கையறைக்கு எப்படி அழைப்பது என இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் நடிப்பு ராட்சசன் என்றால் அவர் இவர்தான்
”அந்த நாள் ”முதல் ‘இந்த நாள்’ வரை நாம் பல கிரைம் திரில்லர் கதைகளை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம் இந்தக் கொலை படத்தில் அப்படி என்ன வித்தியாசம்
மற்ற கிரைம் கதை படங்களிலிருந்து இந்தப் படம் மாறுபட்டு தெரிய வேண்டும் என்பதற்காக
இயக்குனரின் மெனக்கடல்
எடிட்டரின் உழைப்பு
கேமரா மேன் இன் பார்வை
என அனைத்து டெக்னீசியங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர் படம் முழுக்க ஒரே டோன் அதாவது கலர் ஒரே மாதிரியாக வரும்படி படத்தின் DI அழகாக தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்
ஒரு ஆங்கில படம் பார்த்தால் நம் கண்கள் எப்படி இருக்குமோ அதேபோல் திரைக்கதையும் அதற்கேற்ற கலை வடிவமைப்பையும் அழகாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்
அதேபோல் படத்தின் இசை “பார்த்த ஞாபகம் இல்லையோ “பாடலை புதிய இசையில் அதன் தனித்தன்மை கெடாமல் இசையை இயற்று இருக்கிறார் இசையமைப்பாளர்
திரைக்கதையில் கொலையாளி யார் என சந்தேக வட்டத்தில் கொண்டு வரும் காட்சிகள் இயக்குனரின் தனி சிறப்பு
இவனா அவனா
அவனா இவன்
என்று நாம் யூகிக்காத வகையில் காட்சி அமைப்புகளை செதுக்கியிருப்பது இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது
எந்தக் கட்சியில் படத்தை துவைக்கினாரோ அதே காட்சியில் படத்தின் இறுதிக்காட்சியாக நிறைவு செய்து இருக்கிறார்
கொலை ஹாலிவுட் –சவால் விடும் தமிழ் சினிமா