spot_img
HomeNewsவான் மூன்று விமர்சனம்

வான் மூன்று விமர்சனம்

ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமி வினோத் கிருஷ்ணா அபிராமி வெங்கடாச்சலம் டெல்லி கணேஷ் லீலா சாம்சன் மற்றும் பலர் நடிக்க ஏ எம் ஆர் முருகேஷ் இயக்கத்தில் நாளை 11/08/23 ஆஹா ஓ டி டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் படம் வான் மூன்று

காதலில் தோல்வி அடைந்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனைக்கு வரும் ஆதித்யா

அதேபோல் காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனைக்கு வரும் அம்மு அபிராமி

இருவரும் புதிய பாதையில் பயணிக்க முற்படும் காதல்

தந்தையை எதிர்த்து கல்யாணம் செய்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு வரும் அபிராமி வெங்கடாஜலத்திற்கு பிரைன் ஸ்டோக் தான் சாகறதுக்குள் தன் தந்தையை காண வேண்டும் ஆசை அதை நிறைவேற்றும் கணவன் வினோத் கிருஷ்ணா

அடுத்து வயதான டெல்லி கணேசன் மனைவி லீலா இதயத்தில் ஆபரேஷன் செய்ய 7 லட்சம் பணம் வேண்டும் பணத்துக்கு பரிதவிக்கும் டெல்லி கணேஷ்

தன் மனைவியின் ஆசை நிறைவேற்ற பரிதவிக்கும் வினோத்

கிருஷ்ணா தற்கொலைக்கு முயன்று அதேபோல் தற்கொலைக்கு முயன்ற அம்மு அபிராமியை திருமணம் செய்ய பரிதவிக்கும் ஆதித்யா பாஸ்கர்

இவர்கள் மூவரின் ஆசை நிறைவேறியதா என்பதே மீதிக்கதை

இயக்குனர் ஏ எம் ஆர் முருகேஷ் கதைக்களத்தை மருத்துவமனைக்குள் அமைத்திருக்கிறார்
காதலிக்கும் காதல்
காதலுக்கு கல்யாணம் முடிந்து காதல்

வயதான பிறகும் காதல்

என மூன்று விதமான காதலை மூன்று விதமான களத்தில் திரைக்கதை அமைத்து தொய்வில்லாமல் படத்தை மிக அருமையாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர்

96 படத்தில் பருவ வயதில் நடிகராக அறிமுகம் ஆகி இந்த படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார் ஆதித்யா பாஸ்கர் அவரின் காதலின் தோல்வியை மட்டும் சொல்லிய இயக்குனர் காதலை காட்ட வில்லை அதே போல் அம்மு அபிராமியின் காதலை சொன்ன இயக்குனர் அவர் காதலையும் காட்டவில்லை அது கதைக்குத் தேவையில்லை என்று நினைத்து விட்டார் உண்மைதான்

அதேபோல் வினோத் கிருஷ்ணா அபிராமி வெங்கடாச்சலம் காதலித்து கல்யாணம் செய்து பிறகு வரும் காதல் அதில் உள்ள அன்னியோன்யம் மனைவியின் ஆசை நிறைவேற்ற அவர் தந்தையிடம் சண்டை போடும் காட்சி அவர் காதலின் உண்மையை வெளிப்படுத்துகிறது

முதிர்ந்த காதல் அது டெல்லி கணேஷ் லீலா இவர்களின் உரையாடல் அந்த வயதுக்குரியர்களுக்கு அந்த உரையாடல் பல ஏக்கங்களை வர வைக்கும்

அந்தந்த வயதிற்குரிய காதல் அந்த காதல் மருத்துவமனை வரை வரும்போது ஏற்படும் பரிதவிப்புக்கள் என உணர்வுகளை உணர்ச்சிப்பூர்வமாக படம் பார்ப்பவர்களுக்கு மிகைப்படுத்தாமல் எதார்த்தத்தை எதார்த்தமாக திரையில் கட்டி இருக்கும் இயக்குனருக்கு நம்முடைய வாழ்த்துக்கள்

வான் மூன்று -ஒரு காதல் கவிதை

Aaditya Bhaskar – Sujith Kumar

Ammu Abhirami – swaathi

Vinoth kishan – jhoshva

Abhirami Venkatachalam – jothi Meenakshi

Delhi Ganesh – sivam

Leela Samson – Chitra

Crew List of Vaan Moondru:

Producer – Vinoth Kumar Senniappan

Production – Cinemakaaran

Director – AMR Murugesh

DOP – Charles Thomas

Must Read

spot_img