spot_img
HomeNewsஅடியே விமர்சனம்

அடியே விமர்சனம்

ஜிவி பிரகாஷ் குமார்,கெளரி கிஷன்,வெங்கட் பிரபு,ஆர்.ஜே. விஜய் மற்றும் பலர் நடிக்க வெளிய வந்திருக்கும் படம் அடியே

வசதியான குடும்பத்தில் பிறந்து தாய் தந்தையரை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஜீவி பிரகாஷ் தொலைக்காட்சி நேர்முக கானலில் வரும் பாடகி தன் வளர்ச்சிக்கு காரணம் பள்ளியில் பயிலும் போது முகம் தெரியாத நபர் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூற அதைக் கேட்கும் ஜிவி பிரகாஷ் இந்த முகம் தெரியாத நபர் தான் தான் என்பதை தெரியப்படுத்த முயற்சிக்கும்போது யாரோ ஒருவன் தான் அந்த முகம் தெரியாத நபர் என்று பாடகியிடம் தெரிவித்து நட்பாகி இருக்கும் விஷயம் அறிந்த ஜிவி பிரகாஷ் அதிகமாக குடித்துவிட்டு மயக்கம் அடைய முழித்துப் பார்க்கும்போது தான் ஒரு இசையமைப்பாளராகவும் பாடகி தன் மனைவியாகவும் இருப்பதை அறிந்து குழப்பம் ஆகிறார் நமக்கும் குழப்பம் தான் ஆனால் அது கனவு இல்லை எப்படி எதனால் என்பதை பார்க்க பாருங்கள் அடியே படத்தின் முதல் பாதி ஒரு மாறுபட்ட படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. இரண்டாவது பாதி இதை தக்க வைக்காமல் குழப்பத்தை தருகிறது. சயின்ஸ் பிக்சன் படத்தில் காதலை சொல்ல முயற்சி செய்து காதலை மட்டுமே சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். கௌரி கிஷன் நடிப்பிலும், முக உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் குஷ்பூ, ஜோதிகாவின் சாயல் தெரிகிறது. சரியான கதையை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக உருவாகலாம்.

காதல் காட்சிகளில் மிக நுணுக்கமான நடிப்பை தந்துள்ள்ளார். ஜி. வி பிரகாஷ் நடிப்பில் கொஞ்சம் பக்குவம் தெரிகிறது. ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு தகுந்த நடிப்பை தர முயற்சி செய்துள்ளார்.வெங்கட் பிரபு ஒளிப்பதிவுவும் இசையும் ஒகே ரகம் தான். சயின்ஸ்க்காக இல்லாமல் காதலுக்குக்காக இந்த அடியேயை ரசிக்கலாம்.

Must Read

spot_img