spot_img
HomeNewsலக்கி மேன் விமர்சனம்

லக்கி மேன் விமர்சனம்

யோகி பாபு அப்துல் வீரா மற்றும் பல நடிக்க செப்டம்பர் 1ஆம் தேதி வெளிவர இருக்கும் படம் லக்கி மேன் கதைக்களம் சிறு வயது முதல் அதிர்ஷ்டம் இல்லாத துரதிஷ்டசாலியாக வ ல

வ லம் வரும் யோகி பாபுவுக்கு அதிர்ஷ்டம் என்பது ஒரு எட்டாக்கனியாக இருக்க ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் கமிஷனுக்கு வேலை செய்து வருகிறார் அதே நேரத்தில் ஒரு சீட்டு கம்பெனியில் பணம் கட்டி வர குழுக்களில் அவருக்கு ஒரு கார் பரிசாக கிடைக்கிறது அந்த கார் கிடைத்தது முதல் யோகி பாபுவுக்கு அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடப்பதால் அந்த காரின் ராசி என்று நம்புகிறார் அதே நேரத்தில் காவல் துறை அதிகாரி வீராவுக்கும் யோகி பாபுவுக்கும் ஒரு சிறிய ஈகோ பிரச்சனை ஏற்பட காவல்துறை அதிகாரி வீரா யோகி பாபுவின் காரை கடத்த கார் காணாமல் போனதால் தன் அதிஷ்டம் போய்விட்டதாக இன்னும் யோகி பாபு காருக்காக போராட இறுதியில் கார் கிடைத்ததா என்பதை மீதி கதை கதையின் நாயகனாக யோகி பாபு இந்த படத்தில் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார் மண்டேலாக்கு பிறகு இந்த படம் அவருக்கு தனி இமேஜை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை ஒரு நகைச்சுவை நடிகர் அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு ஒரு யோகி பாபு எடுத்துக்காட்டு நகைச்சுவை பிரதானமாக்காமல் கதையின் நாயகனாக கதையின் போக்கு சிறிதும் கெடாமல் மிக அருமையாக அடித்த யோகி பாபுவுக்கு வாழ்த்துக்கள் நாயகி நடிப்பில் தான் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் எதார்த்த மனைவியாக தாயாக நாம் அன்றாடம் பார்ககும் எதார்த்த பெண்ணாக நம் கண் முன் தெரிகிறார் காவல்துறை அதிகாரி வீரா கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை மூன்றும் மூலதனம் ஆக்கி காவல்துறை அதிகாரியாக நம் முன் வாழ்ந்து காட்டி இருக்கிறார் தன்னை அவமானப்படுத்திய யோகி பாபுவை பழிவாங்கும் முயற்சியில் காரை மறைத்து யோகி பாபு டார்ச்சர் செய்வதும் பதிலுக்கு யோகி பாபு வீராவின் வளர்ப்பு நாயை கடத்துவதும் பிறகு நாயின் பாசத்திற்காக ஏங்கும் வீராவிடம் நாயை ஒப்படைப்பது இயக்குனரின் டச்சிங் சீன் யோகி பாபு நண்பனாக அப்துல் நண்பன் என்ன செய்வானோ அதை செவ்வன செய்து இருக்கிறார் சிறுவன் சாத்விக் அருமையான தேர்வு எதிர்காலத்தில் ஒரு சிறந்த குழந்தை நட்சத்திரமாக வளம் வருவது உறுதி இயக்குனர் பாலாஜி வேணுகோபால் தன் கதையில் மனிதனின் உணர்வுகளையும் உணர்வுகளின் சங்கமங்களையும் மிக எதார்த்தமாக சாதாரண மனிதனுக்கும் தன் படைப்பு புரியும் படியாக திரைக்கதை அமைத்து எந்த ஒரு காட்சியிலும் தொய்வு ஏற்படாமல் சிறப்பாக படத்தை வடிவமைத்திருக்கிறார் அதிர்ஷ்டத்தை தேடி தான் நாம் அனைவரும் ஓடிக் கண்டிருக்கிறோம் அது கிடைக்காத வரை துரதிஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உழைப்பு அதை மறந்து விடுகிறோம் அதை நமக்கு நினைவூட்டுகிறார் அதுவும் ஒரு பூவால் வருடு போல்

லக்கி மேன்“““ படம் பார்ப்பவர்களும் லக்கி மேன்

Must Read

spot_img