spot_img
HomeNewsடீமன் விமர்சனம்

டீமன் விமர்சனம்

சச்சின் கும்கி அஸ்வின் சுருதி மற்றும் பல நடிக்க ரமேஷ் பழனி வேல் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டீமன் இவர் இயக்குநர் வசந்த பாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்
கதைக்களம் இயக்குனராகம் வேண்டும் ஆசையில் நாயகன் ஒரு பேய் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி கதை ஓகே ஆக தனிமை வேண்டி ஒரு அபார்ட்மெண்டில் குடி போக அங்கு தூக்கத்தில் நாயகனுக்கு பேய் கனவாக வந்து கொண்டிருக்கிறது
அது கனவா நிஜமா என்று தெரியாமல் நாயகன் திண்டாட இரண்டு படுக்கை அறை உள்ள அந்த அப்பார்ட்மெண்டில் மூன்றாவது படுக்கை அறை ஒன்று இருக்க அதில் உள்ளே செல்லும் நாயகன் அங்கு இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது தற்கொலை செய்து கொண்ட ஒரு குடும்பத்தின் நிகழ்வுகள் அந்த போட்டோ பிரேமில் வீடியோ போல் ஓடுகிறது
அதை பார்க்க பார்க்க என்ன செய்வது என்று புரியாமல் நாயகன் தவிக்க அறையை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கும் போது வாயை மூடி கொள்கிறது அவனை அறியாமல் நாயகன் தற்கொலை செய்து கொள்கிறான் பிறகு நடப்பது என்ன படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்
நாயகன் சச்சினுக்கு இயக்குனர் கதாபாத்திரம் அவர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லி ஓகே வாங்குவது காட்சியாக காட்டப்படுவதால் நம் வேறு ஒரு கதை களத்துக்கு தயாராகி பிறகு இன்னொரு கதை களத்திற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர்
நாயகன் அஸ்வின் நடிப்பு திறமையால் நம்மை கட்டி போட்டு வைத்து விடுகிறார் நாயகனின் நண்பனாக கும்கி அஸ்வின் இன்னும் பலர் இருந்தாலும் அவர்களுக்கு படத்தின் பங்களிப்பு குறைவாக இருப்பதால் நாயகனை மேலோங்கி இருக்கிறார் நாயகி படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் அந்த கதாபாத்திரத்தை படத்தில் இணைத்து இருக்கிறார் கனவு காட்சிகளா நிஜக் காட்சிகளா என்று நம்மை குழப்பி பயமுறுத்தி இறுதியில் நாம் எதிர்பார்க்காத விருப்பத்தை தருகிறார் இயக்குனர்

டீமன் படம்=– பார்ப்பவர்கள் கண்டிப்பாக பாராட்டுவார்கள்

Must Read

spot_img