நடிகர்கள்: மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நாசர், நரேன் மற்றும் பலர் நடிக்க
எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 800 கதைக்களம் இலங்கையின் தோட்ட விலைக்கு செல்லும் தமிழர் குடும்பத்தில் முரளிதரன் என்ற சிறுவன் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தினால் கிரிக்கெட்டை நேசிக்க அந்த நேசிப்பு இலங்கை நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு கிட்ட அதில் தன பவுலிங் மூலம் பல விக்கெட்டுகளை எடுத்து யாரும் தொடாத சாதனை 800 விக்கெட் எடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இலங்கை நட்சத்திர விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அப்படியே படப்பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர் அது மட்டும் இல்லாமல் இலங்கை ஈழத் தமிழர் சிங்களர்க்கு இடையில இருந்த வன்முறை சம்பவங்களை இடைச் சொருகி மிக அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் முத்தையா முரளிதரன் ஆக மதுர் மெட்டல் சரியான தீர்வு மிக அருமையாக நம் கண் முன் முத்தையா முரளிதரனை கொண்டு வந்து காட்டுகிறார் நாம் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக ஸ்டேடியத்தில் மற்றும் டிவியிலும் பார்த்திருப்போம் ஆனால் அந்த கிரிக்கெட் அதில் உள்ள அரசியல் அதில் உள்ள பிரச்சனைகள் அதில் உள்ள நெளிவு சுளிவுகள் சட்டதிட்டங்கள் என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து இயக்குனர் தெளிவாக திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் முரளிதரன் விக்கெட் எடுப்பதற்காக தவறான முறையில் பந்து வீசுவதாக உலக கிரிக்கெட் அமைப்பு அவர் மீது குற்றம் சொல்ல தன் மீது தவறு இல்லை என்பது நிரூபிக்க அவர் படும் பாடு நம்மனதை கணக்கச் செய்கிறது ஒரு கிரிக்கெட் வீரரின் கதையை சினிமாவாக எடுக்கும் போது பல கமர்சியல் விஷயங்கள் இணைக்க வேண்டி இருக்கும் அது படத்தின் வியாபாரத்திற்காக இயக்குனர் செய்யும் வியாபார உத்தி ஆனால் 800 படத்தில் எந்த ஒரு சினிமா தளம் இல்லாமல் மிக எதார்த்தமாக திரை கதையை வடிவமைத்து அழகாக இருக்கிறார் இயக்குனர் எந்த ஒரு கதாபாத்திரமும் செயற்கை தனம் இல்லாமல் நடித்திருப்பது நடிகர்களின் சிறப்பு
800 —- சினிமா தனம்-இல்லாத ஒரு சினிமா