spot_img
HomeNewsசுயம்பு' படத்திற்காக நிகில் இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்!

சுயம்பு’ படத்திற்காக நிகில் இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்!

சுயம்பு’ படத்திற்காக நிகில் இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்!

ஹீரோ நிகில், பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ள தனது 20வது படமான ‘சுயம்பு’ படத்திற்காக வியட்நாமில் கடுமையான பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியுள்ளார். தாகூர் மது வழங்கும் பிக்சல் ஸ்டுடியோஸின் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் போர் வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்புக் கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் பயிற்சி பெற்று இருக்கிறார் நிகில். இந்தப் படத்தில் சில நம்பமுடியாத சண்டைக் காட்சிகளை திரையில் கொண்டு வர இருக்கிறார் நிகில்.

இதற்கான பயிற்சியை முடித்த பின்பு இப்போது நிகில் வாள் சண்டையில் நிபுணராகி உள்ளார். இதற்கு காரணம் இவ்வளவு நாட்கள் நிகில் எடுத்த கடுமையான பயிற்சிகள் தான். இப்போது இரண்டு கைகளாலும் வாள் சண்டை பயிற்சி செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது நடிகர் நிகில் பகிர்ந்துள்ள வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாகும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

நடிகர்கள்: நிகில், சம்யுக்தா

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பாரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ.

Must Read

spot_img