பூ ராமு காளி வெங்கட் மற்றும் பல நடிக்க வெளி வரவேற்கும் படம் கிடா
டைட்டிலை பார்த்ததும் ஏதோ அவார்டுக்காக எடுத்த படம் என்று நினைத்துப் பார்த்தால் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அதையும் மீறி மக்கள் ரசிக்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்
கதைக்களம் தீபாவளிக்கு புதுத்துணி எடுத்து தரச் சொல்லும் பேரனுக்கு தீபாவளி புத்தாடை எடுக்க பணத்தைப் புரட்ட திண்டாடுகிறார் தாத்தா
இது ஒருபுறம் இருக்க காளி வெங்கட் கறிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறார் குடித்துவிட்டு தாமதமாக வேலைக்கு செல்வதால் அவரை அவமானப்படுத்தி விடுகிறார் கறிக்கடை முதலாளியின் மகன் தீபாவளி அன்று உன் கடைக்கு எதிரே கறிக்கடை போட்டே தீருவேன் என்று சபதம் எடுத்து ஆடு வாங்க பணத்திற்காக அலைகிறார் காளி வெங்கட்
பேரனுக்கு துணி எடுக்க பணம் புரட்ட முடியாமல் சாமிக்கு நேந்து விட்ட ஆட்டை விற்க முயற்சிக்க அது முடியாமல் போகிறது ஆடு தேடும் காளி வெங்கட் ஊர் மக்களிடம் ஆட்டுக் கறிக்கு முன் பணம் வாங்கி பூ ராமவின் ஆட்டை வாங்க முயற்சிக்கும் போது திருடர்கள் ஆட்டை திருடிக் கொண்டு போய் விடுகின்றனர்
ஆட்டைத் தேடி பூ ராமவும் பேரனும் காளி வெங்கட்டும் இரவு முழுதும் அலைகின்றனர் ஆடு கிடைத்ததா பேரனுக்கு புது துணி எடுக்க முடிந்ததா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
இயக்குனர் வெங்கட் தீபாவளியில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இவர் எடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனை ஒரு ஏழை சிறுவனின் புத்தாடை ஆசை ஒரு சாமானியனின் ஒரு சிறு தொழில் ஆசை இதை வைத்துக்கொண்டு 2 மணி நேரம் பார்க்கும் நமக்கு சளிப்பு திட்டாமல் மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார்
காளி வெங்கட் சமீப காலமாக குணச்சித்திர கதாநாயகனாக பல படங்களில் வலம் வந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
. பூ ராமு பேரனுக்காக புத்தாடை வாங்க அவர் படும் பாடு கஷ்ட படும் மக்களுக்கு மட்டுமே தெரியும்
நான்கு திருடர்கள் நகைச்சுவையை எதார்த்தமாக தெளித்து நம்ம சிரிக்க வைத்திருக்கிறார்கள்
இவர்கள் பங்கு கிளைமாக்ஸ் ல் மிகச் சிறப்பு
இடையே ஒரு சிறிய காதல் அந்த காதல் பிரச்சினையை அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர
இறுதிக்காட்சியில் நாம் இப்படித்தான் படம் முடிய போகிறது நினைத்தால் நாம் எதிர்பாராத திருப்புமுனை தந்திருக்கிறார் இயக்குனர்
கிடா தீபாவளியின் கம்பி மத்தாப்பு ஜொலிப்பு