புன்னகை பூ கீதா ரிச்சர்ட் யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் சில நொடிகளில் கதைக்களம் லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் டாக்டராக நாயகன் ரிச்சர்ட் அவர் மனைவி புன்னகைப் பூ கீதா ரிச்சர்ட்க்கு மாடல் அழகி யாஷிகா ஆனந்த் மீது ஒரு மோகம் அதேபோல் யாஷிகா ஆனதுக்கும் ரிச்சர்ட் மேல் ஒரு மோகம் இருவரும் ஒரு நாள் ரிச்சர்ட் வீட்டில் தனிமையில் இருக்க அந்நேரத்தில் ரிச்சர்ட் மனைவி திடீரென வீட்டுக்கு வருவதாக போன் செய்ய யாஷிகா ஆனந்த் பின் வாசல் வழியாக வெளியே செல்ல சொல்ல அவளும் சொல்கிறாள் சிறிது நேரத்தில் ரிச்சர்ட் பின்பக்கம் செல்லும்போது அங்கு யாஷிகா இறந்த நிலையில் இருக்க செய்வதென்று அறியாத ரிச்சர்ட் யாருக்கும் தெரியாமல் யாஷிகா ஆனந்தை புதைத்து விட ஒரு பத்திரிகை நிருபர் யாஷிக் ஆனந்தின் தங்கை எனக்கூறி பிச்சட்டை பிளாக் மெயில் செய்ய அவளையும் கொலை செய்கிறார் அவள் போனில் இருக்கும் வாய்ஸ் மெசேஜில் யாஷிகா ஆனந்த் சாகவில்லை அவள் உயிரோடுதான் இருக்கிறாள் என தெரிய வருகிறது அதற்கு காரணம் யார் என்று பார்க்கும்போது அதிர்ச்சியில் ரிச்சர்ட் என்ன செய்வது என்று புரியாமல் திகைக்க யார் அவர் புரிந்துகொள்ள படத்தை பாருங்கள் புன்னகை பூ கீதா தயாரித்து நாயகியாக வலம் வருகிறார் படத்தில் கணவரிடம் இருக்கும் காதலை அவர் வெளிப்படுத்தும் விதம் மிக அருமை ரிச்சர்ட் கொலை செய்துவிட்டு அதனால் ஏற்படும் மன உலைச்சலில் அவர் படும் பாடு நம்மை ஐயோ என்று சொல்ல வைக்கிறது யாஷிகா ஆனந்த் அழகு பதுமையாக வலம் வருகிறார் காதல் செய்கிறார் காமத்தை தூண்டுகிறார் இறக்கிறார் பின்பு உயிர்த்தெழுகிறார் அவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் படம் முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் லண்டனில் நாம் வசிப்பது போல் ஒரு எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய் பரத்ராஜ் படத்தில் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்து பார்க்கும் ரசிகனை வெளிப்படையாமல் படத்தை எடுத்து செல்கிறார்
சில நொடிகளில் அன்பின் வெளிப்பாடு