ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்க வெளிவந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன்
தயாரிப்பு வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
கதைக்களம் சிறு வயது முதல் சலூன் நடத்தி வரும் பெரியவர் மீது ஈர்ப்பு கொண்ட நாயகன் தன் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹேர் ஸ்டைலிஷ் ஆக வரவேண்டும் என்று கனவு காண பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன் லட்சியத்தை அடைய பல கோடி கடன் வாங்கி ஒரு மிகப்பெரிய சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூன் ஆரம்பிக்க முயற்சி செய்ய அதை திறக்கும் வேளையில் மிகப்பெரிய தடங்கள் ஏற்பட தற்கொலைக்கு முயற்சிக்கும் கதாநாயகன் தப்பிப் பிழை தானா சலூன் திறக்கப்பட்டதா என்பதை மீதி கதை
முதல் பாதி மிக அருமையாக நகைச்சுவையாக மக்கள் ரசிக்கும் படியாக படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர்
பிற்பகுதியில் என்ன செய்வது என்று தெரியாமல்
டிவி ஷோ
தரைமட்டம்
குடிசை வாசி அக்கிரமிப்பு
நடன போட்டி
என தயிர் சாதத்துக்கு பிரியாணி மிக்ஸ் பண்ணது போல் கொந்தி விடுகிறார் இயக்குனர்
பல நகைச்சுவை பாத்திரங்கள் எடுத்து நாயகனாக அவதாரம் எடுத்து அதிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் கதாபாத்திரங்களை வடிவமைத்து நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க சிங்கப்பூர் சலூன் கதைக்களத்தை தன்னூல் பொருத்திக் கொண்டுள்ளார் நடிப்பில் குறைய எதுவும் இல்லை என்றாலும் ஆனால் மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பது நகைச்சுவை மட்டுமே இதை வருங்காலத்தில் அறிந்து தன் கதாபாத்திரங்களை வகுத்தால் ஆர்.ஜே பாலாஜி முன்னணி கதாநாயகன் வரிசையில் இடம் பெறுவது உறுதி
படத்தில் இவருக்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் சத்யராஜ் மாந்தோப்பு கிளியே சுருளிராஜனை விட ஒரு கஞ்சன் இருக்க முடியும் என்றால் அது சிங்கப்பூர் சொல்லில் இருக்கும் சத்யராஜ் மட்டுமே முடியும்
மிக அருமையாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்
இவரிடம் போனில் பேசும் ஒய் ஜி மகேந்திரன் காமெடி வசனங்கள் அசத்தல்
இன்னும் சில காட்சிகள் இவர் இருவருக்கும் வைத்திருந்தால் பட ஓட்டத்திற்கு சிறப்பாக இருந்திருக்கும்
ரோபோ சங்கர் அவர் வழக்கமான பணி
மிக முக்கியமான கதாபாத்திரம் லால் சலூன் கடைக்காரராக தன்னை உருவாக்கி அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்
ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் இல் கிளிகள் போராட்டம் இதையெல்லாம் பார்க்கும் போ
இது சினிமாவை மிஞ்சின சினிமா
என்று நமக்கு தெரிய வருகிறது
சிங்கப்பூர் சலூன்– திருப்பதி மொட்டை