நடிகர் அருண் பாண்டியன் மகள் இயக்குனர் பாக்கியராஜின் மகன் இயக்குனர் பாண்டியராஜன் மகன் நடிகர் அசோக் செல்வனின் மனைவி மற்றும் இந்தியன் ரயில்வே உட்பட பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் ப்ளூ ஸ்டார்
அரக்கோணத்தில் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் இரண்டு கிரிக்கெட் டீம்கள் ஒன்றுக்கொன்று பகையுடன் இருக்க அந்த பகை மறந்து ஒன்று சேர்ந்தால் உலகையே வெல்லலாம் என்ற சிறந்த கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் படம் ப்ளூ ஸ்டார்
இயக்குனர் ஜெய் மிகச்சிறந்த கருத்தை சொல்ல கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்கிறார் அந்த கிரிக்கெட்டில் இருக்கும் நெளிவு சுளிவுகள் கிரிக்கெட்டில் இருக்கும் ரகசிய வார்த்தைகள் மற்றும் விளையாடும் முறை என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து ஒரு பாமரனுக்கும் கிரிக்கெட் புரியும் வகையில் மிகச் சிறப்பாக தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார்
கிரிக்கெட்டில் இருக்கும் அரசியல் சாதாரண மனிதன் முக்கிய போட்டியில் பங்கு பெற அவன் படும் பாடுகள் சிபாரிசுகளால் திறமைகள் அமுக்கப்பட அதையும் மீறி வெளிவரும் ஒரு சாமானியனின் உணர்வுகளின் சங்கமம் தான் ப்ளூ ஸ்டார்
அசோக் செல்வன் எந்த கதாபாத்திரம் என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் தன்னை நிலை நிறுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறார் எதிர்காலம் இவருக்கு சிறப்பு என்பது இவரின் வரிசையான வெற்றி படங்களை சாட்சி
சாந்தனு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சிறந்த படம் அவருக்கு அமைந்திருக்கிறது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் வரும் காலங்களில் இவரை பல படங்களில் பார்க்கலாம்
பாண்டியராஜன் மகன் பிரித்திவிராஜ் இவருக்குள் இவ்வளவு திறமையா எங்கே வைத்திருந்தார் இந்த திறமைகளை அதற்கு வடிகாலாக அமைந்திருக்கிறது இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் அவரையும் வருகாலங்களில் தமிழ் சினிமாவில அதிகமாக காணலாம் என்பது இந்த ப்ளூ ஸ்டார் படமே ஒரு அத்தாச்சி
கீர்த்தி பாண்டியன் துடுக்குத்தனத்தின் துள்ளல் அதுவும் தன் கணவருடன் ஜோடி என்பதால் அந்த சந்தோஷத்தில் அவர் நடிப்பு இரட்டிப்பு சந்தோஷம்
ஒரு கிரிக்கெட் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல விஷயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டி திரைக்கதை மூலம் தொய்வில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை எடுத்து செல்வதில் இயக்குனர் ஜெய் வெற்றி பெற்றிருக்கிறார்
ப்ளூ ஸ்டா–ர் இது ஒரு நட்சத்திர படம்