spot_img
HomeNewsமறக்குமா நெஞ்சம் விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

ரக்ஷன்,மலினா,தீனா,முனீஸ்காந்த்மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் மறக்குமா நெஞ்சம்
காதல் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுக்குள் துளிரும் உன்னதமான உணர்வு அந்த உணர்வை வெளிப்படுத்துவதில் ஏதோ ஒரு சிலருக்கு ஆர்வம் சிலருக்கு தயக்கம் சிலருக்கு இயலாமை

ஆர்வம் உள்ளவர்கள் காதலை வெளிப்படுத்தி கல்யாணத்தை கொண்டாடுகிறார்கள்

இயலாமையில் உள்ளவர்கள் பெற்றோர் பார்க்கும் வரனை மணமுடித்து வாழ்க்கை தொடங்குகின்றனர்

ஆனால் காதலை வெளிப்படுத்த தயங்கும் சிலரால் திருமண வாழ்க்கைக்கு செல்ல முடியாமல் காதலை சொல்லாமல் மனதிற்குள் புழங்கி வாழ்க்கை வாழாமல் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் சிலருக்காக கடந்த கால வாழ்க்கைக்கு நாம் செல்ல முடியாததால் அதற்கான காரண காரியங்கள் அறிந்து கடந்த காலத்திற்கு சென்று தன் காதலை வெளிப்படுத்தும் காதலன் காதலியின் கதையே மறக்குமா நெஞ்சம்

பள்ளிப்படிப்பை முடித்து காலேஜ் வாழ்க்கையும் முடித்து அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மத்தியில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பின் தேர்வு செல்லாது என்று கோர்ட்டின் உத்தரவு வர மீண்டும் தேர்ந்த அதே பள்ளிக்கு வருகிறார்கள் நண்பர்கள் பள்ளிப்படிப்பு அன்று காதலை சொல்ல முடியாமல் போன நாயகன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் காதலை வெளிப்படுத்துகிறான் இதுவே மறக்குமா நெஞ்சத்தின் கதை

நாயகன் பள்ளிப் பருவத்திலும் பிறகு எதார்த்த வாழ்க்கைக்கு தயாராக பருவத்திலும் இது மாறுபட்ட நடிப்பை நம்மிடம் வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்

நாயகன் நாயகி இவரும் காதலை சொல்ல முடியாமல் தவித்து பிறகு பெற்றோர் பார்த்த வரனை மணமுடிக்கும் நேரத்தில் நாயகன் காதலை வெளிப்படுத்த அதை ஏற்றுக் கொண்டு காதலுக்கு மரியாதை செய்கிறார்

நண்பர்களா செய்யும் நகைச்சுவைகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன

இயக்குனர் கதைக்களத்தை முதல்வன் படத்தில் எடுத்திருக்கிறார் என்பது புரிய வருகிறது

அதில் ஒரு வசனம் வரும் இந்த டேப் ரெக்கார்டில் ரீவைண்ட் பட்டன் இருப்பது போல் நம் வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற வசனம்

அதைக் கதைக்களமாக எடுத்துக்கொண்டு அந்த ரீவைண்ட் பட்டனுக்காக பிளஸ் டூ தேர்வை ரத்து செய்து மீண்டும் 10 வருடத்திற்கு பிறகு அனைவரையும் கொண்டு செல்கிறார்

காதல் என்பது ஒரு முறை தான் பூக்கும் ஆனால் இயக்குனர் பூத்த மலரை பறித்து மீண்டும் செடியில் சேர்க்கிறார்

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனருக்கு இன்னும் சில சுவாரசியமான காட்சிகளை அமைத்திருந்தால் படம் வெற்றியின் வரிசையில் சேர்ந்திருக்கும்

மறக்குமா நெஞ்சம் —மறக்க முடியவில்லை

Must Read

spot_img