நடிகர் தனுஷ் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராக தன்னை உருவாக்கிக் கொண்டு தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார். இன்னொரு பக்கம் அவருக்குள் இருக்கும் டைரக்ஷன் ஆசையால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கினார். அதன் பிறகு சில வருடங்கள் டைரக்ஷனுக்கு இடைவெளி கொடுத்துவிட்டு இப்போது மீண்டும் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி வருகிறார் தனுஷ்.
அதேசமயம் இவர் தனது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தார் என்றும் ஆனால் அந்த படத்தில் நடிப்பதை ரஜினிகாந்த் தவித்து விட்டார் என்றும் அதை தனுஷும் புரிந்து கொண்டார் என்றும் சமீபத்தில் நடைபெற்ற லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தே கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என் மகள்களின் டைரக்சனில் நான் நடிக்க மாட்டேன் என்று முதலிலேயே கூறிவிட்டேன். கோச்சடையான் படம் அனிமேஷனில் உருவானபோது என் மகள் சௌந்தர்யா அந்த படத்தை இயக்கினார். அப்போது கூட அவர்களுக்கு சத்தமாக ஆக்சன் சொல்ல தெரியவில்லை. அதனால் கே.எஸ் ரவிக்குமாரை அழைத்து நீங்கள் ஆக்சன் கட் சொல்லுங்கள் என்று கூறினேன்.
ஏனென்றால் அவர்களை பார்க்கும்போது எனக்கு சிறு பிள்ளைகளாகவே தோன்றியது. அதேபோலத்தான் தனுஷும் எனக்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் என்னைப் பற்றி புரிந்து கொண்டு அவராகவே ஒதுங்கி விட்டார்” என்று கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.