spot_img
HomeNewsஇலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில்; பார்வையாளர்களிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய ரம்பா

இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில்; பார்வையாளர்களிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய ரம்பா

இலங்கையில் ஜப்னாவில் பின்னணி பாடகர் ஹரிஹரனின் இன்னிசை நிகழ்ச்சி நேற்று (பிப்-9) நடைபெற்றது. நடிகைகள் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திறந்த வெளி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் குறைவான கட்டணப் பகுதியில் இருந்த பார்வையாளர்கள் பெரும்பாலானோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து முன் வரிசைக்கு செல்வதற்காக அங்கும் இங்கும் ஓடியதால் மிகப்பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்பாவும் அவரது கணவர் இந்திர குமாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நடிகை ரம்பா பார்வையாளர்களை சமாதனப்படுத்தும் விதமாக அனைவரையும் பார்த்து மைக்கில், “உங்களை நம்பி தானே இங்கே வந்துள்ளோம். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தீர்களே. தயவுசெய்து பொறுமையாக இருங்கள். அமைதியாக இருங்கள்” என தொடர்ந்து கேட்டுக் கொண்டார். ஆனாலும் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இதேபோன்ற தள்ளுமுள்ளு நிகழ்வு நடந்து மிகப்பெரிய விமர்சனத்துக்கு ஆளான நிலையில், இலங்கையிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Must Read

spot_img