spot_img
HomeNewsபருத்திவீரன் நடிகருக்கு பீர் பரிசாக வாங்கி கொடுத்த மகள்

பருத்திவீரன் நடிகருக்கு பீர் பரிசாக வாங்கி கொடுத்த மகள்

பருத்திவீரன் படத்தின் மூலம் நாயகன் கார்த்தி மட்டுமல்ல அந்த படத்தில் நடித்த பல பேருக்கு இயக்குனர் அமீரால் புது வாழ்வும் மிகப்பெரிய புகழும் கிடைத்தது. அந்த வகையில் பருத்திவீரன் சுஜாதா என்று சொல்லப்படும் அளவிற்கு ஒரு குணசித்திர நடிகை அந்த படத்திலிருந்து தான் கிடைத்தார்.

அதுமட்டுமல்ல சித்தப்பு சரவணன் என்று ரசிகர்களால் இப்போது வரை அழைக்கப்படும் அளவிற்கு நடிகர் சரவணனுக்கு மிகப்பெரிய பெயரையும் அந்த படம் பெற்று தந்தது. அதன் பிறகு அவர் திரையுலக பயணமே பரபரப்பாக மாறியது.

அதேபோல அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் பொன்வண்ணன். ஒரு காலத்தில் இயக்குனராக இருந்து பின் வில்லன் நடிகராக மாறி தற்போது குணச்சித்திர நடிகராக நடித்த வருபவர் பொன்வண்ணன்.

இவருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லை என்றாலும் எப்போதாவது ஒருமுறை பீர் அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுவும் கூட குடும்பமாக சேர்ந்து இருக்கும் சூழலில் வீட்டிலேயே பீர் வாங்கி வைத்துக்கொண்டு அதை குடிப்பதை பெருமையாகவும் கருதுகிறார்.

எந்த அளவிற்கு இதை அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவருடைய மூத்த மகள் ஒரு நிகழ்வின்போது தனது தந்தைக்கு ஒரு பாட்டில் பீரை பரிசாக வழங்கும் அளவுக்கு சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த தகவலை சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் பொன்வண்ணனே கூறியுள்ளார்.

Must Read

spot_img