spot_img
HomeNewsஇளையராஜா இசையமைத்துள்ள படத்திற்கு நடிகையால் வந்த புதிய சிக்கல்

இளையராஜா இசையமைத்துள்ள படத்திற்கு நடிகையால் வந்த புதிய சிக்கல்

ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜா தற்போது தன்னை தேடி வரும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு மறுப்பு சொல்லாமல் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு சிலந்தி என்கிற படத்தை இயக்கிய முன்னாள் பத்திரிக்கையாளர் ஆதிராஜன் தற்போது இயக்கியுள்ள நினைவெல்லாம் நீயடா என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்த படம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மனிஷா யாதவ். வழக்கு எண், ஜன்னலோரம், சென்னை 28 பார்ட் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு இன்னும் மூன்று லட்சம் ரூபாய் சம்பள பாக்கி தயாரிப்பாளர் தர வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

அது மட்டுமல்ல இந்த படம் வெளியாவதற்குள் இந்த சம்பள பாக்கியை தனக்கு வசூலித்து தருமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த பிரச்சனை இருந்ததால்தான் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட கதாநாயகியான இவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

spot_img