விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜ்குமார் பெரியசாமி முதன்முறையாக ரங்கூன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கவுதம் கார்த்திக். தற்போது சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் அமரன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ராஜ்குமார் பெரியசாமி.
சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் இந்த படத்தின் டீசர் மற்றும் அமரன் என்கிற டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன்பு கார்த்திக், பானுப்ரியா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ்வர் இயக்கத்தில் இதே போல அமரன் என்று ஒரு படம் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு அமரன் டைட்டில் தான் பொருத்தமாக இருந்ததால், பழைய அமரன் படத்தின் இயக்குனர் ராஜேஷ்வரை அணுகி இந்த படத்தின் டைட்டிலை பெற்றுள்ளார்களாம். இதற்கு கவுதம் கார்த்திக்கும் அவரது தந்தையும் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளார்கள்.
ஏற்கனவே ரங்கூன் படத்தில் பணியாற்றிய நட்புக்காக கவுதம் கார்த்திக்கும் படத்தின் தயாரிப்பாளரான கமலுடன் கொண்ட நட்புக்காக நடிகர் கார்த்திக்கும் இணைந்து இந்த படத்தின் டைட்டிலை பேசி பெற்று தந்துள்ளார்களாம்.