spot_img
HomeNews சைரன்விமர்சனம்

 சைரன்விமர்சனம்

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, ஜோதி, யுவினா பர்தவி, சாந்தினி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், சுரேந்தர் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆன்டணி பாக்யராஜ் இயக்கத்தில், வெளிவந்திருக்கும் படம் சைரன் 
                கதைக்களம் மகளின் பாசத்திற்காக ஏங்கும் தந்தையின் கதை 

            ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவி செய்யாத கொலை குற்றத்திற்காக சிறைவாசம் இருக்க 14 வருடங்களுக்குப் பிறகு பரோலில் வெளியே வருகிறார் அவரைப் பார்க்க விரும்பாத அவர் மகள் தன் அத்தையின் வீட்டுக்கு சென்று விடுகிறார்

           இந்நிலையில் ஊரில் இருக்கும் அரசியல்வாதியின் வாரிசை தேர்தல் நிற்கவைக்க அரசியல்வாதியான அழகம் பெருமாள் முடிவு செய்ய அவருக்கு வலது கரமாக இருக்கும் சுரேந்தர் அவரை கொலை செய்ய முடிவு செய்து தந்திரமாக கொலையும் செய்து விடுகிறார் 

   கொலையை விசாரிக்கும் போலீஸ் கஅதிகாரியாக கீர்த்தி சுரேஷ் 
     இந்நிலையில் சுரேந்தரை ஜெயம் ரவி கொலை செய்து விடுகிறார் அதேசமயம் அழகம் பெருமாளை கொலை செய்ய சுரேந்தர் கூலிப்படையை அனுப்புவதற்கு முன்னாலேயே அழகம்பெருமாள் கொல்லப்பட்டிருக்கிறார்
       பரோலில் வந்திருக்கும் ஜெயம் ரவி மீது அதிகாரியான கீர்த்தி சுரேஷ் க்கு சந்தேகம் ஏற்பட அவரை கைது செய்ய நீதிபதி முன் ஆஜர் படுத்தும்போது கொலைக்கான ஆதாரங்கள் சரிவர இல்லாத காரணத்தினால் ஜெயம் ரவியின் பரோலை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பை சொல்ல கொலையாளி ஜெயம் ரவி தான் என்று ஆணித்தரமாக நம்பும் கீர்த்தி சுரேஷ் அதற்கான ஆதாரங்களை திரட்ட முயற்சிக்க ஜெயம் ரவி இவர்களை ஏன் கொலை செய்தார் கொலைக்கான காரணத்தை காண பாருங்கள் சைரன்
    பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் ஜெயம் ரவிக்கு இந்த படம் அவரின் திரை வாழ்க்கையில் ஒரு உன்னதமான இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை மகளின் பாசத்துக்காக ஏங்கும் தந்தையாக அவர் படும் பாடு பிள்ளையைப் பெற்ற தந்தைக்கு தான் தெரியும் அவரின் தவிப்பு ஆம்புலன்ஸ் டிரைவராக அவர் பணி செய்யும் போது உயிரைக் காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சி ஒவ்வொரு ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் சமர்ப்பணம் ஆகிறது மனைவியாக வரும் அனுபமா பரமேஸ்வரனி காது மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளி அவரிடம் சைகையில் பேசுவது மாற்றுத்திறனாளிகளின் மனதில் இடம் பிடித்து விடுகிறார் உயிர் என்பது எவ்வளவு புனிதமானது அந்த உயிருக்கு விலை என்பது கிடையாது அந்த உயிரைக் காப்பாற்றுவது ஒரு உன்னதமான செயல் என்று என்று கூறும் அவர் எதற்காக மூன்று உயிர்களை எடுக்கிறார் என்ற காரணத்தை அவர் சொல்லும் போது அது சரி என்று படம் பார்க்கும் ரசிகன் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் வயதான தோற்றம் உடல் மொழி அவரிடம் சிறப்பாக அமைந்திருக்கிறது 
     நாயகி கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரி எப்போதுமே சிடுசிடப்பாக இருக்கும் கதாபாத்திரம் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி காவல்துறை தான் 

     அவரின் விசாரணை முறை அதற்கு தடை போடும் அவரின் மேல் அதிகாரி சமுத்திரகனி தடைக்கு காரணம் ஜாதி

      நகைச்சுவைக்கு யோகி பாபு தன் பங்கை சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல் மக்களை சிரிக்கவும் வைத்து விடுகிறார்

     அனுபமா பரமேஸ்வரன் மாற்றுத்திறனாளியாக அவரின் பங்களிப்பு மிக அருமை எந்த ஒரு இடத்திலும் மிகைப்படுத்தி நடிப்பில்லாமல் ஒரு எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அவர் நடிப்பை பார்க்கும் போது உண்மையாகவே அவர் மாற்றுத்திறனாளியாக உள்ளாரா அல்லது நடிக்கிறாரா என்பதை நாம் கணிக்க முடியவில்லை அந்த அளவுக்கு இருக்கிறது அவரின் நடிப்பு
    அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் திரைக்கதையை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அதேசமயம் சென்டிமென்ட் ஆகவும் நகைச்சுவையாகவும் ஒரு படத்திற்கு என்னென்ன தேவையோ அதை அழகாக திரைக்கதையில் கொண்டு வந்து மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார் 
சைரன்————— இது ஒரு உயிரின் ஓசை 

Must Read

spot_img