spot_img
HomeNewsபொய் சொன்னா மெயின்டன் பண்ணு ; இயக்குனருக்கு சிம்பு சொன்ன அட்வைஸ்

பொய் சொன்னா மெயின்டன் பண்ணு ; இயக்குனருக்கு சிம்பு சொன்ன அட்வைஸ்

சிம்புவை வைத்து படம் இயக்குவது படம் தயாரிப்பது என்பது ஒரு யானையை வைத்து பராமரிப்பது போலத்தான் என்று பலரும் தங்களது அனுபவங்களை கூறியிருப்பார்கள். அதேசமயம் சிம்பு நடிப்பில் காளை என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் தருண் கோபி. அதற்கு முன்னதாக விசாரணை வைத்து திமிரு என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தின் கதையை கூட சிம்புக்காக தான் அவர் தயார் செய்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போய் விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்துவிட்டது.

இதனை தொடர்ந்து எப்படியும் தருண்கோபியை விட்டு விடக்கூடாது என நினைத்து அவரது அடுத்த படத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டு நடித்த சிம்பு அந்த படம் மிகப்பெரிய அளவில் போகவில்லை. திமிரு, காளை படங்களுக்கு முன்பாக தருண்கோபி உதவி இயக்குனராக பணியாற்றிய சமயத்திலேயே சிம்புவுடன் நெருங்கி பழகியவர்.

சிம்பு நடிப்பில் உருவாகி கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற கெட்டவன் என்கிற படத்தில் கூட ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிகராக தருண் கோபியை அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கொஞ்ச நாளைக்கு மேல் வளராமல் அப்படியே கைவிடப்பட்டது.

இந்த படம் ஏன் கைவிடப்பட்டது என்பது பற்றி சமீபத்தில் இயக்குனர் தருண்கோபியிடம் கேட்டபோது தவறான புரிதல் காரணமாகத்தான் பிரச்சினை ஏற்பட்டு இந்த படம் நிறுத்தப்பட்டது. சிம்புவை பொறுத்தவரை பொய் சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்வார். பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்.. ஆனால் அப்படி அவரிடம் சொன்ன பொய்யை 10 வருடம் கழித்து நீங்கள் சொன்னாலும் மாற்றி சொல்லாமல் மெயின்டன் பண்ணி வர வேண்டும். அதை அந்த அளவிற்கு அவர் கவனத்தில் வைத்திருப்பா..ர் மாற்றி சொன்னால் அவ்வளவுதான்.. அவரிடம் சிக்கிக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்

Must Read

spot_img