spot_img
HomeNewsராஷ்மிகாவை டார்ச்சர் செய்த ஹீரோவுக்கு நடுவானில் விமான பயணத்தில் நேர்ந்த திகில் அனுபவம்

ராஷ்மிகாவை டார்ச்சர் செய்த ஹீரோவுக்கு நடுவானில் விமான பயணத்தில் நேர்ந்த திகில் அனுபவம்

நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தேகமே இல்லாமல் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஷ்மிகா நடிப்பில் ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. இதனால் ஹைதராபாத்திற்கும் மும்பைக்கும் மாறி மாறி பிளைட்டில் பறந்து வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு அவரும் இன்னொரு பாலிவுட் நடிகையான ஸ்ரத்தா தாஸ் என்பவரும் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். விமானம் கிளம்பிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு பத்திரமாக வந்து தரை இறங்கியது.

ஆனால் அப்படி விமானம் தரை இறங்குவதற்குள் சாவில் இருந்து மீண்டு வந்தோம் என்பது போன்ற அனுபவத்தை சந்தித்ததாக தனது திகில் நிமிடங்கள் பற்றி கூறியிருந்தார் ராஷ்மிகா. இந்த நிலையில் கன்னடத்தில் பொகரு என்கிற படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் துருவ சார்ஜா என்பவருக்கும் சமீபத்தில் இதேபோன்று ஒரு விமான பயண திகில் அனுபவம் ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் விமானத்தில் படப்பிடிப்பிற்காக இவரும் இவரது படக்குழுவினரும் கிளம்பி சென்றுள்ளனர். அதேபோல விமானம் வானில் பறக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே பெய்ய ஆரம்பித்த மிகப்பெரிய மழை காரணமாக இடையில் டர்புலன்ஸ் எனப்படும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் பைலட் ஒரு வழியாக சமாளித்து ஸ்ரீநகர் விமான நிலையம் கொண்டு போய் பத்திரமாக பயணிகளை இறக்கி விட்டுள்ளார். இவரும் சாவின் விளிம்பில் இருந்து தப்பித்து வந்துள்ளோம் என்று கூறி இந்த விஷயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Must Read

spot_img