spot_img
HomeNewsபொய் சொல்லி நீதிபதியிடம் சிக்கிய காமெடி நடிகர் ; காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

பொய் சொல்லி நீதிபதியிடம் சிக்கிய காமெடி நடிகர் ; காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக நுழைந்து, பின்னர் குணச்சித்திர, நடிகராக காமெடி நடிகராக மாறியவர் நடிகர் இளவரசு. ஆனாலும் இவர் இன்னும் ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த முறை ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு தேர்வானவர்கள் அதில் முறையீடு செய்துள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளவரசு. ஆனால் சம்பந்தப்பட்ட எதிர் தரப்பினர் தாங்கள் அவ்வாறு முறைகேடு செய்யவில்லை என்றும் இதுகுறித்து இளவரசியிடம் காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அந்த வகையில் இளவரசுவை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி விசாரணை செய்ததாக போலீசார் தற்போது நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இளவரசு டிசம்பர் 12ஆம் தேதி தான் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் டிசம்பர் 13ஆம் தேதி தான் போலீசார் விசாரணையில் ஆஜரானதாகவும் வேண்டும் என்றே தவறான தகவல்களை தருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் போலீசார் தங்கள் தரப்பில் டிசம்பர் 12ஆம் தேதி தான் அவர் விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறித்த சிசிடிவி காட்சிகளை கொடுத்துள்ளனர். அதேசமயம் இளவரசு மறுக்கின்ற அதே தேதியில் அவர் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்தாரா என்று விசாரித்த போது அன்றைய தினம் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும் இளவரசு சென்னையில் உள்ள ஒளிப்பதிவாளர் யூனியனில் தான் இருந்தார் என்றும் தகவல் சொல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் இளவரசுவை கண்டித்து இப்போது கூட அவர் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைக்க ஒத்துழைக்குமாறு கூறியுள்ளது.

Must Read

spot_img