spot_img
HomeNewsஹீரோ அவர்தான்.. ஆனால் சட்டை வில்லனோடது ; எஸ்ஜே சூர்யா பட டைட்டில் கலாட்டா

ஹீரோ அவர்தான்.. ஆனால் சட்டை வில்லனோடது ; எஸ்ஜே சூர்யா பட டைட்டில் கலாட்டா

நடிகர் எஸ்ஜே சூர்யா மிகப்பெரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தாலும் அவரது ஆசை என்னவோ நடிப்பில் மட்டும்தான் இருந்தது. அதனால் சில படங்களை இயக்கி விட்டு நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் டைரக்ஷனும் அவரை கைவிட்டது.. நடிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு குறைந்து போனது.

அந்த சமயத்தில் தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் பிஸியான நடிகராக மாறினார் எஸ்ஜே சூர்யா. தற்போது வில்லனாக நடித்தாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

அந்த வகையில் தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்துள்ள சரி போத சனிவாரம் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு தமிழில் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் நாயகன் நானியின் கதாபாத்திர பெயர் தான் சூர்யா என்றாலும் கூட தமிழில் உள்ள ரசிகர்களை கவர்வதற்காக எஸ்ஜே சூர்யாவின் பெயர் வரும் விதமாக படத்தின் டைட்டில் வைத்துள்ளார்கள் என்று தான் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு எஸ் ஜே சூர்யாவின் மாஸ் வேலை செய்கிறது.

Must Read

spot_img