நடிகர் சிவகுமாருக்கு 82 வயது ஆகிறது. மகன்கள் நடிக்க வந்துவிட்ட பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் சினிமா நிகழ்வுகள் மட்டுமல்லாது கலை, இலக்கிய நிகழ்வுகள் பலவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார். அதே சமயம் அவர் இன்னும் தான் ஒரு எம்ஜிஆர், சிவாஜி போல மிகப்பெரிய ஹீரோ என தன்னை நினைத்துக் கொண்டு ஏதாவது விழாக்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களின் செல்போனை தட்டிவிட்டு அநாகரிகமாக நடந்து கொண்டு வருகிறார். அதன் பிறகு மன்னிப்பு கேட்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவர் மட்டுமல்ல, அவரது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் கூட தந்தையின் செயலுக்கு முட்டுக்கொடுத்து மன்னிப்பு கேட்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று திடீரென ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சிவக்குமார். அப்போது வயதான ஒருவர் சிவகுமாருக்கு சால்வை கொடுக்கும் விதமாக முன் வந்தார். வேகமாக வெளியேறிக் கொண்டிருந்த சிவகுமார் வெடுக்கென அந்த சால்வையை பறித்து தூக்கி எறிந்தார்.
இதனால் சால்வை கொடுக்க வந்தவர் அவமானப்பட்டு குறுகி நிற்க, அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்னுமா இவர் இந்த பைத்தியக்காரத்தனத்தை விடாமல் இருக்கிறார் என்று பலரும் இந்த வீடியோவை சோசியல் மீடியாவை பார்த்துவிட்டு கடுமையாக சிவக்குமாரை விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே சூர்யா, கார்த்தி இருவருக்கும் தங்களது படங்கள், சில இயக்குனர்கள் தொடர்பாக பிரச்சனை தலைக்கு மேல் இருக்க இப்படி தந்தை போகும் இடத்தில் எல்லாம் தேவையில்லாமல் ஏதாவது சங்கடத்தை இழுத்துக் கொண்டு வந்து விடுகிறாரே இதற்கு வேறு நாம் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டுமா என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்களாம்.
திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கும் சிவகுமார் அதில் உள்ள கருத்துக்களை கொஞ்சம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.