spot_img
HomeNewsபிரபல ஹீரோவை டிரைவிங் லைசென்ஸ் கேட்டு மிரட்டிய நடிகருக்கு பூமராங்காக திருப்பித் தாக்கிய சம்பவம்

பிரபல ஹீரோவை டிரைவிங் லைசென்ஸ் கேட்டு மிரட்டிய நடிகருக்கு பூமராங்காக திருப்பித் தாக்கிய சம்பவம்

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் டிரைவிங் லைசன்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் பிரபல ஹீரோ கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க, அவரது ரசிகராக அதேசமயம் மோட்டார் வாகன ஆய்வாளராக பிரபல காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு என்பவர் நடித்திருந்தார்.

அப்படி தீவிர ரசிகராக இருந்த அவருக்கும் பிரித்விராஜுக்கும் திடீரென ஈகோ மோதல் ஏற்பட அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் அந்த படத்தின் கதை. அதற்கு காரணம் பிரித்விராஜ் தனது டிரைவிங் லைசென்ஸை தொலைத்து விடுவார். புதிய லைசன்ஸ் பெறுவதற்குள் இந்த ஈகோ மோதலில் சிக்கி அவர் படும் அவஸ்தைகள் தான் மொத்த கதையும்.

இந்த நிலையில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு கடந்த வருடம் கார் ஓட்டிச்சென்ற போது விபத்து ஏற்பட்டு அதில் ஒரு இளைஞர் படுகாயம் அடைந்தார். அந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக ஒரிஜினல் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் இருந்து மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டும் அது குறித்து நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுராஜ் வெஞ்சாரமூடுவின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Must Read

spot_img