spot_img
HomeNewsஅருண்விஜய் போல எனக்கும் கை கொடுக்குமா ? எதிர்பார்ப்பில் பிரபல இயக்குனரின் தம்பி

அருண்விஜய் போல எனக்கும் கை கொடுக்குமா ? எதிர்பார்ப்பில் பிரபல இயக்குனரின் தம்பி

சினிமாவில் ஒரு சிலர் புதிதாக அறிமுகமாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலங்கள் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு அவர்களது தனிப்பட்ட முயற்சி தான் வெற்றிக்கு துணையாக நிற்கும். அதே சமயம் வெற்றி பெற்றவர்களின் குடும்பத்திலிருந்து அந்த பிரபலத்தை பயன்படுத்தி பலர் வாரிசு நடிகர்களாக வருவதுண்டு.

ஆனால் அப்படி வருபவர்கள் எல்லாருமே ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று விடுவதில்லை. அவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் அவர்களுக்கு கை கொடுப்பதும் இல்லை. அப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் பல வருடங்களாக ஒரு நல்ல வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

அப்படி ஒருவர் தான் பிரபல இயக்குனரும் தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவருமான விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இவர் சினிமாவில் நடித்து வந்தாலும் மிகப்பெரிய அளவில் ஹிட் படம் என்று எதுவும் இவருக்கு அமையவில்லை. கழுகு என்கிற ஒரு படம் மட்டுமே இவர் பெயர் சொல்லும் விதமாக அமைந்தது.

இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ஜோஸ்வா ; இமை போல் காக்க என்கிற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கிருஷ்ணா. இந்த படத்தில் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் வருண் நடித்துள்ளார்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். அதுவரை அருண் விஜய் பல படங்களில் பல வருடங்களாக நடித்தும் கிடைக்காத பெயரும் வரவேற்பும் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு அவர் சினிமா பயணமே மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. இன்று அவரது படங்களுக்கு என தனியாக ஒரு மார்க்கெட் உருவாகி விட்டது .

அந்த வகையில் இந்த ஜோஸ்வா படமும் வெற்றி பெற்றால் தனது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.. அருண் விஜய் போலவே தனக்கும் இந்த படத்தின் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்படலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம் கிருஷ்ணா.

Must Read

spot_img