spot_img
HomeNewsசூர்யாவுக்கு சிபாரிசு செய்த ஜோதிகா ; கோட்டை விட்ட அஜித், விஜய்

சூர்யாவுக்கு சிபாரிசு செய்த ஜோதிகா ; கோட்டை விட்ட அஜித், விஜய்

நடிகர் சூர்யா இன்று வருடத்திற்கு ஒரு படம் நடிக்கும் அளவிற்கு கவனமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பை, உழைப்பை வழங்கி வருகிறார். அவருடன் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்த ஜோதிகா ஒரு கட்டத்தில் சூர்யாவுடன் காதலில் விழுந்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது காக்க காக்க தான். இந்த படம் தான் இவர்கள் இருவரின் காதலையும் இன்னும் அழுத்தமாக வளர செய்தது. இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு முன்பாக இயக்குனர் கௌதம் மேனன் இதன் கதையை விஜய், அஜித் ஆகியோரிடம் எல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இந்த கதையின் மேல் பெரிய அளவில் நம்பிக்கை வைக்காமல் இதில் நடிக்க மறுத்து விட்டனர்,

அவ்வளவு ஏன், கௌதம் மேனனின் முதல் படமான மின்னலே படத்தின் நாயகன் மாதவன் கூட இந்த கதையில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். விக்ரம் போலீஸ் படம் வேண்டாம் என்று சொன்னவர் அடுத்த சில மாதங்களிலேயே சாமி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது இன்னொரு வேடிக்கை.

அந்த சமயத்தில் தான் நடிகை ஜோதிகா மூலமாக இந்த கதையை சூர்யாவிடம் சொல்லும் வாய்ப்பு கெளதமுக்கு கிடைத்துள்ளது. நல்ல கதை என்பதை கேள்விப்பட்டு தான், சூர்யாவிடம் இந்த கதையை கேட்கும்படி கூறினார் ஜோதிகா. கதையை கேட்டதும் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதன் பிறகு அந்த படத்தில் நடித்து அது சூர்யாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது எல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த வரலாறு தான். இந்த தகவலை சமீபத்தில் கௌதம் மேனனே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img