பார்த்திபன் என்றாலே எந்த விழா மேடைகளிலும் கலகலப்பாக பேசக்கூடியவர். அதேசமயம் ஜாலியாக பேசுகிறேன் என எதையாவது பேசி வைத்து சில நேரங்களில் அது மற்றவர்களை காயப்படுத்தும் விதமாகவும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. சில விஷயங்களில் அவர் இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு அவர் தங்கர் பச்சானின் இயக்கத்தில் அழகி என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. இதை முன்னிட்டு நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பார்த்திபன் மற்றும் தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பார்த்திபன், “ரஜினி படத்திற்கே ஒரு பக்கம் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் மிகப்பெரிய ஹீரோயின் தேவைப்படுகிறார்கள். அதேபோல மணிரத்தினம் படத்திற்கு கமல்ஹாசன் தேவைப்படுகிறார். இப்படி அவர்கள் பெரிய அளவில் போராடிக் கொண்டிருக்க, நானும் புதுமுகங்கள் 13 பேரை வைத்து டீன்ஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறேன். இதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ரஜினிகாந்த் தற்போது மல்டி ஸ்டாரர் படங்களில் தான் நடிக்கிறார், சோலாவாக நடிப்பதில்லை என்பதை கிண்டலடிக்கும் விதமாக பார்த்திபன் இப்படி கூறினாரா என ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.