spot_img
HomeNews ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

 ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

 ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார்.

கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார்.

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று குறிப்பிடத்தக்கது.

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர்.

பிரியா பவானிஷங்கர் இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 26 அன்று ‘ரத்னம்’ திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் திரைப்படம் உருவாகியுள்ளதாக ஹரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img