ஜிவி பிரகாஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோகினி காளி வெங்கட் தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் டியர்
கதைக்களம் பென்சில் முள் விழும் சத்தத்தில் தூக்கம் கலையும் கதாநாயகனுக்கும் தூக்கத்தில் குறட்டை விடும் கதாநாயகி க்கும் திருமணம் நடந்த பின் நடக்கும் பிரச்சனைகளின் தொகுப்பே டியர்
ஜிவி பிரகாஷ் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிய அவருடைய லட்சியம் ஏ பி சி உலகத் தொலைக்காட்சியில் பணிபுரிய வேண்டும் என்பது இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷை மணமுடிக்க அவருக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்க இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர் ஒரு நாள் ஒருவர் தூங்குவது என்று இந்நிலையில் ஏபிசி தொலைக்காட்சியில் ஜிவி பிரகாஷுக்கு வேலை கிடைக்க மத்திய அமைச்சரை நேரலையில் நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைக்க சந்தோஷத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் பாத்ரூமில் தூங்கி விட மத்திய அமைச்சரின் நேரலை வேறு ஒருவர் மூலம் நடைபெறுகிறது ஜி.வி. பிரகாஷின் வேலையும் பறிபோகிறது
அதற்கு காரணம் தன் மனைவியின் குறட்டை தான் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்கிறார் ஜிவி பிரகாஷ் அதே சமயம் ஐஸ்வர்யா ராஜேஷ் கர்ப்பமாக முடிவு என்ன என்பதே மீதி கதை
சில படங்களில் வெற்றி வாய்ப்பு இழுந்த ஜி வி பிரகாசுக்கு இந்தப் படம் அவருக்கு நல்ல இடத்தை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை
ஒரு அப்பாவி இளைஞனாக அண்ணன் பேச்சை தட்டாத தம்பியாக ஒரு செய்தி வாசிப்பாளராக தன் மனைவியை நேசிக்கும் கணவனாக பலவிதமான பரிமாணங்களை நம்முன் பிரதிபலிக்கிறார் ஜீவி பிரகாஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னைப் பெண் பார்க்க ஒரு அனைவரிடமும் தனக்கு குறட்டை சத்தம் வருவதை வெளிப்படையாக செல்பவர் ஜிவி பிரகாஷ் பார்த்ததும் தாயாரின் பேச்சைக் கேட்டு உண்மையை சொல்லாமல் மறைத்து முதல் இரவில் ஒரு படம் பாடு அப்பப்பா தூங்க முடியாமல் தவிப்பது தூங்கியதும் குறட்டை விட்டவுடன் ஜி.வி பிரகாஷ் அலறியடித்து எந்திரிப்பதும் எதார்த்தத்தின் உண்மை
தன்னை விவாகரத்து செய்ய கணவன் கோர்ட்டுக்கு செல்லும் போது சேர்ந்துதான் வாழ்வேன் என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் ஒவ்வொரு தமிழ் பெண்களின் மனக்குமுறல்களின் வெளிப்பாடு இவர் மூலம் வெளிப்படுகிறது
காளி வெங்கட் இந்த படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் மனைவியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் தாயிடம் பாசத்தை பொழிவதிலும் தம்பியிடம் கண்டிப்பை காட்டுவதிலும் மிக எதார்த்தமான குடும்பத் தலைவனாக பிரதிபலிக்கிறார்
அவருக்கு மனைவியாக வருபவர் 90களில் ராதிகாவை ஞாபகப்படுத்துகிறார்
கதையை குறட்டையில் ஆரம்பித்து கிளை கதையாக ரோகிணி விட்டு அவர் கணவர் தலைவாசல் விஜய் ஓடிப்போன கதை பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் மூலம் அழைத்து வரப்பட்டு ரோகினி உடன் சேர்த்து வைத்து படத்தை மகிழ்ச்சிகரமாக நிறைவு செய்கின்றனர்
டியர் —பந்தங்களின் பாசப் போராட்டம் சொந்தங்களின் உணர்ச்சி குவியல்