இந்திய சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர். இவர் அடுத்ததாக நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அது குறித்த வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டார் ராஜமவுலி.
இவருடன் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தை இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடியும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ராஜமவுலியிடம் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் முதல் நாள் எப்படி இருக்கும் என இப்போதே சொல்லுங்கள் என்று ஜாலியாக கேட்டார்.
இன்னும் முறையாக எந்த அறிவிப்பும் செய்யாமல் இருக்கும் நிலையில் இப்படி அவர் கேட்டதால் அவரது வாயை அடைக்கும் விதமாக அங்கிருந்த கூட்டத்தினரை பார்த்து இவரை யாராவது எழுந்து வந்து அடித்தீர்கள் என்றால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தருவேன் என ஜாலியாக கூறினார் ராஜமவுலி உடனே இயக்குனர் அனில் ரவிபுடி. ஐயோ.. அவ்வளவு எதற்கு கொடுக்கிறீர்கள்.. இரண்டு ரூபாயை போதுமே” என்று தன் பங்கிற்கு ஜாலியாக கூறினார்.