கிருஷ்ணகிரி அடுத்துள்ள ஜவ்வாது மலையில் வம்சவ வழியாக இயற்கை மருத்துவம் செய்து வரும் நாயகியின் தாயார் மற்றும் சகோதரன் சகோதரனின் மனைவி குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் அங்கு குத்தகைக்கு இடம் பார்க்கும் வரும் மருத்துவர் ஒரு மிகப்பெரிய நோயின் தாக்கத்தால் மயங்கி விட அவரை இந்த குடும்பம் காப்பாற்றி விடுகிறது.
அவர் மருத்துவர் என்றாலும் தன் உயிரை காப்பாற்ற முடியாது என்று கை விரித்த நிலையில் தன் உயிரைக் காப்பாற்றி குடும்பத்திற்கு நன்றி தெரிவித்து தன் சக டாக்டர்களிடம் இது பற்றி சொல்ல அவர்கள் அந்த வைத்தியத்தை அடைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவனிடம் சொல்ல அவன் அந்த குடும்பத்தில் உள்ள நாயகி குழந்தைகள் தவிர மற்றபடி கொலை செய்து அந்த மருதுவத்தை அடைய நினைக்கும் போது நாயகியின் தாய் அந்த மருத்துவத்தை கிணற்றுக்குள் தூக்கி போட்டு விடுகிறார்கள்.
நாயகியும் குழந்தையும் தப்பிக்க நாயகியை தேடி அந்த சமூக விரோதி கும்பல் அலைய இறுதியில் எண்ணம் ஆனது இதுவே கன்னி படத்தின் கதை.
இயக்குனருக்கு இந்த படம் கன்னி முயற்சி என்பதால் தன் எண்ணங்களையும் முயற்சிகளையும் முழு ஈடுபாடுடன் இந்த படத்தில் செலுத்தியுள்ளார். நாம் மறந்து போன இயற்கை வைத்தியத்தை அதன் மகத்துவத்தை இந்த படத்தின் கதையின் கருவாக எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்புக்கான தளங்கள் மிகவும் சிரமப்பட்டு சிரமமான இடங்களில் படம் பிடித்து நம் கண் முன் உலாவ விட்டு இருக்கிறார்.
நாயகி அஸ்வினி கிராமத்து முகச்சாயல் இல்லை என்றாலும் ஒப்பனை மூலம் அவரை மலைவாசி ஆக்கி நம் கண் முன் நிறுத்துகின்றார். ஆனால் நாயகி அஸ்வினி தன் நடிப்பின் மூலம் மலைவாசி பெண்ணாகவே மாறிவிட்டார். அந்த மலைவாசி பெண்களுக்குரிய கோபம் ஆத்திரம் தைரியம் என பல விதமான முக பாவங்களை நம் கண் முன் நிறுத்துகிறார். சமூக விரோதிகளின் உயிர்களை எடுக்கும் காட்சி ஒவ்வொரு தமிழச்சியின் வீரத் ற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது. தமிழ் திரை உலகம் இவருக்கு கிரீடம் சூட்டும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருந்தாலும் சமூக விரோதியாக வரும் ராம் பரதன் அறிமுகம் தன் வில்லத்தனமான நடிப்பில் மக்களை கவர்வார் என்று நினைத்தால் இவரின் உடல் மொழியும் வாய் மொழியும் பார்ப்பவரை எரிச்சல் அடைய வைக்கிறது. முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு கத்தி விட்டால் அதுதான் வில்லத்தனம் என்று நினைத்து தன் கதாபாத்திரத்தை சிதைத்து இருக்கிறார். வரும் படங்களிலாவது இவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இவரின் கலைப்பயணம் நெடுந்தூரம் பயணிக்கும்.
இயக்குனர், தான் சொல்ல வந்த கருத்தை படத்தில் மிகத்தெளிவாக சொல்லி இருந்தாலும் இன்னும் சில விஷயங்களில் அலசி ஆராய்ந்து அதாவது இயற்கை மருத்துவத்தின் மருத்துவ பயன்பாட்டின் மூலிகையின் பெயர்களை சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக என்பது நம்முடைய கருத்து.
கன்னி முயற்சி வெற்றியின் ஆரம்பம்