spot_img
HomeNewsபுஜ்ஜி அட் அனுப்பட்டி - விமர்சனம்

புஜ்ஜி அட் அனுப்பட்டி – விமர்சனம்

 

ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்க்கும் அண்ணன் தங்கை அந்த ஆட்டுக்குட்டி மீது உயிரையே வைத்திருக்கின்றனர். அந்த ஆட்டுக்குட்டியை அவருடைய தந்தை குடிப்பதற்காக விற்று விட, விற்ற ஆட்டுக்குட்டியை வாங்குவதற்காக சிறுவர்கள் மூவரும் படம் கஷ்டத்தை சொல்லும் படம் புஜ்ஜி.

குழந்தை நட்சத்திரங்கள் பிரணிதி சிவசங்கரன், கார்த்திக் விஜய் மற்றும் லாவண்யா கண்மணி குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம் மற்றும் விலங்குகளின் இரக்கத்தின் உன்னதமான பிணைப்புடன் யதார்த்தமான நடிப்பால் கதையுடன் நம்மை ஒன்ற வைத்துள்ளனர்.

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – அருண் மொழி சோழன், எடிட்டிங் – சரவணன் மாதேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்பு கதைக்களத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஆட்டுக்குட்டி எங்கெங்கு சென்றதோ அங்கெல்லாம் தேடி கடைசியில் கசாப்பு கடையில் ஆட்டை வெட்டும் போது அதை காப்பாற்றும் சிறுவர்கள் அதை வாங்க ரூபாய் 5000 தேவை என்பதால் ஒரு பேப்பரில் விஷயத்தை எழுதி 50 ஜெராக்ஸ் ஆக எடுத்து வீதியில் கொடுத்து அவர்கள் படும் பாடு படம் பார்க்க அனைவரையும் பாசத்திற்காக ஏங்க வைக்கும்.

படத்தில் இரண்டு சிறுமிகள் ஒரு சிறுவன் இவர்களே படத்தின் நாயகர்கள் கதைக்களம் இவர்களை சுற்றியே நடப்பது போல் இயக்குனர் ராம் கந்தசாமி திரைக்கதை வடிவமைத்திருக்கிறார். குழந்தைகள் உலகம் அன்பானது. அந்த உலகத்துக்கு நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகாக மாறிவிடும் என்பதுதான் படம் சொல்லும் கருத்து.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img