spot_img
HomeCinema Reviewலாந்தர் -விமர்சனம்

லாந்தர் -விமர்சனம்

விதார்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லாந்தர் படத்தின் கதைக்களம் கதை ஓர் இரவுக்குள் நடக்கிறது. ஆனால் இரு கதைகள் ஒரு கதை முன்னிறுவு நேரத்திலும் மறுக்கதை பின் இரவு நேரத்திலும் நடக்கிறது இறுதியில் இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணித்து முடிவடைகிறது

கோவையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரியான விதார்த் நேர்மையானவர். அவரது மனைவி நாயகி ஸ்வேதா டோரதி இருட்டு மற்றும் அதீத சத்தம் கேட்டால் சட்டென்று பயந்து  மயக்கமடைந்து விடும் பாதிப்பு உடையவர். அவருடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக கோவை நகரை விட்டு புறநகரில் உள்ள பெரிய வீடு ஒன்றில் விதார்த் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். கோவை நகரத்தில் முகம் தெரியாத ஒரு நபர், எதிர்படும் நபர்களை கடுமையாக தாக்குவதாக புகார்கள் வருகிறது. அந்த நபரை தேடி செல்லும் காவலர்கள் சிலரும் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள். விசயம் அறியும் விதார்த், அந்த மர்ம மனிதரை பிடிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குகிறார். அவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கிறார். அந்த மர்ம நபர் யார்?, அவரை விதார்த் தலைமையிலான குழுவினர் பிடித்தார்களா? என்பது ஒரு கதை.

மறுபக்கம் அதே கோவையில் ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தனது மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி தன் வீட்டில் இருக்கும் மருத்துவ அறிக்கை ஒன்றை பார்த்துவிட்டு, அது குறித்து மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கிறார். அவர் சொல்லும் தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக வீட்டுக்கு வருகிறார். அவரை மருத்துவமனையில்  இருந்து  அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வரும் அவரது கணவர், பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார். அதன் பிறகு அந்த வீட்டுக்குள் நடந்தது என்ன?, மருத்துவர் என்ன சொன்னார்? என்பது மற்றொரு கதை.

விதார்த் காவல்துறை உயரதிகாரி வேடத்தில் கம்பீரமாக இல்லாமல்.. இயல்பாக இருப்பது உறுத்துகிறது. அதிலும் அவர் மேலாடை இன்றி சிகிச்சை பெறும் காட்சியில்… காவல்துறை உயரதிகாரி தானா..! என்ற ஐயத்தையும் எழுப்புகிறது.

விதார்தின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி தன்னிடமுள்ள முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆனாலும் அவரை ரசிக்க ரசிகர்களின் மனம் மறுக்கிறது. ஏனெனில் ஏதோ ஒன்று  மிஸ்ஸிங்.

மற்றொரு புதுமுக நடிகையான சஹானாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார். இருந்தாலும் முகத்தில் இளமையும், குறும்பும் இருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களுக்கு இவரை பிடிக்கும்.

படம் தொடங்கியதிலிருந்து முதல் பாதி வரை காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.‌ இதற்கு ஒளிப்பதிவாளர் ஞான சௌந்தரும், பின்னணி இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீனும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலே பெரும்பாலான இயக்குநர்கள் லான் – லீனர் முறை அல்லது பேர்லர் ஸ்டோரி என்று சொல்லக் கூடிய ஒரே சமயத்தில் நடக்கும் இரண்டு கதைகள், போன்ற அம்சங்களை தங்களது திரைக்கதைக்கு பக்கபலமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அத்தகைய ஒரு வழக்கமான பாதையில் தான் இந்த படத்தின் இயக்குநர் சாஜி சலீமும் பயணித்திருக்கிறார்.

கதாநாயகிகள் இரண்டு பேர் இருவருக்கும் பெயர் தெரியாத நோய்கள். ஒரு நாயகி மரணம் அடைந்து மறு நாயகி குணமடைகிறார். பரபரப்பான கிரைம் திரில்லராக படம் எடுக்க நினைத்து இயக்குனர் அதில் வெற்றி கனியை தொட முயற்சிக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img